ஹோண்டா நாவி , மேலும் 9 பைக்குகள் – ஆட்டோ எக்ஸ்போ 2016

வரும் பிப்ரவரி 2016 ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் 10 மாடல்களை காட்சிப்படுத்த உள்ளது. அதில் ஹோண்டா நாவி , ஸ்போர்ட்ஸ் மாடல் , 4 மேம்படுத்தப்பட்ட மாடல்கள் , நியோவிங் , EV-cub கான்செப்ட் மற்றும் 2 மிஸ்ட்ரி கான்செப்ட் என மொத்தம் 10 மாடல்களை காட்சிப்படுத்துகின்றது.

இளைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற புதுவிதமான பிரிவில் இந்திய வாடிக்கையாளர்களுக்காக நாவி (NAVi – New Additional Value for India) என்ற பெயரில் இருசக்கர வாகனத்தினை அறிமுகம் செய்ய உள்ளது. இது பெர்ஃபாமென்ஸ் ரக ஸ்கூட்டராக இருக்கலாம்.

இந்த வருடத்தில் விற்பனைக்கு வரவுள்ள 6 மாடல்களை காட்சிப்படுத்த உள்ள நிலையில் நாவி மாடலை தொடர்ந்து 4 பழைய பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மற்றொன்று அட்வென்ச்சர் ரக சூப்பர் பைக்காக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவிலே மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பைக் ஹோண்டா 500X மாடலாக இருக்கலாம்.

டோக்கியோ மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு வந்த 3 சக்கர நியோவிங் கான்செப்ட்  மற்றும் எலக்ட்ரிக் EV-cub கான்செப்ட் மாடல் போன்றவற்றுடன் இரு மிஸ்ட்ரி மாடல்களை காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

honda neowing

மேலும் ஹோண்டா RC213V , விளம்பர தூதுவர்களான டாப்ஸி , அக்‌ஷய குமார் மேடையில் இருப்பார்கள், புகழ்பெற்ற அனிமேஷன் சோட்டா பீம் வாயிலாக சாலை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த உள்ளது.

Exit mobile version