Automobile Tamilan

ஹோண்டா பிரியோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

இந்தோனேசியாவில் ஹோண்டா பிரியோ சத்யா ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேஸ் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

new-honda-brio-satya

பிரியோ காரினை பிரியோ சத்யா என்ற பெயரில் 2016 இந்தோனேசியா சர்வதேச மோட்டார் ஷோவில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆற்றலில் எவ்விதமான மாற்றமும் இல்லாமலும் இல்லை. டீசல் இஞ்ஜின் ஆப்ஷன் காட்சிக்கு வரவில்லை.

முகப்பு தோற்றத்தில் அகலமான கிரிலுடன் அமேஸ் காரில் உள்ளதை போல பிரியோ காரும் அமைந்துள்ளது. பனி விளக்குகள் , முகப்புவ்விளக்கில் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது. பின்புற தோற்றத்தில் சொற்ப மாற்றத்தை மட்டுமே பெற்றுள்ளது. பக்கவாட்டில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

உட்புறத்தில் இருவண்ண டேஸ்போர்டினை பெற்றுள்ளது. கூடுதலான கவர்ச்சியான தோற்றத்தினை வழங்கியுள்ளது.

90 குதிரைதிறன் சக்தியை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 110 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சிவிடி  கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா பிரியோ சத்யா இந்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version