2020 ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகமானது – டோக்கியோ மோட்டார் ஷோ 2019

2020 honda jazz

இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ள நான்காம் தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரினை 46வது டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் என இரு விதமான என்ஜின் ஆப்ஷனுடன் மேம்பட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. ஜப்பான் உள்ளிட்ட சில நாடுளில் ஃபிட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றது.

முந்தைய மாடலை விட முன்புற தோற்ற அமைப்பில் குறிப்பாக முன் பம்பர், கிரில் அமைப்பு, எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய ஹெட்லைட் மற்றும் பானெட் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்கவாட்டு அமைப்பின் பொருத்தவரை சிறிய அளிவில் மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து மினி எம்பிவி போன்றே இதன் தோற்றம் அமைந்துள்ளது. பின்புறத்தில் புதிய பம்பர் மற்றும் யூ வடிவ டெயில் விளக்குகளை கொண்டுள்ளது.

மிகவும் தாராளமான இடவசதி கொண்ட ஜாஸ் காரின் இருக்கை மற்றும் இடவசதி ஆகியவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக இந்த காரில் ஹோண்டா கனெக்ட் என்ப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி வசதி பெற்ற தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டிருக்கும். தொடர்ந்து ஜாஸ் காரில் மேஜிக் இருக்கை வசதியும் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானில் ஜாஸ் அல்லது ஃபிட் காரில் பேசிக், ஹோம், நெஸ், கிராஸ்டார் மற்றும் லக்ஸ் என 5 விதமான மாறுபட்ட வடிவமைப்பினை பெற்ற வேரியண்டுகள் கிடைக்க உள்ளது. இதில் கிராஸ்டார் மாடலில் 16 அங்குல அலுமினியம் வீல் உடன் கிராஸ்ஓவர் தோற்றத்தை வெளிப்படுத்தும் ஸ்டைலிங் மற்றும் இன்டிரியரில் பிரீமியம் ஆப்ஷன்களும் இடம்பெற உள்ளது.

ஹோண்டா ஜாஸ் காரில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார் பெற்ற ஹைபிரிட் ஆப்ஷன் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் கிடைக்க உள்ளது. ஆனால், இரு என்ஜின் நுட்பவிவரங்கள் வெளியிடப்படவில்லை.ஜப்பானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

2020 Honda Jazz Image Gallery

Exit mobile version