கோவிட்-19 வைரஸ்.., 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது..!

சர்வதேச அளவில் மிக வேகமாக பரவும் கோவிட்-19 வைரஸ் பீதியால் பிரசத்தி பெற்ற 2020 ஜெனீவா மோட்டார் ஷோ ரத்து செய்யபட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் 1000க்கு அதிகமானோர் ஒரே இடத்தில் கூடுதவதற்கு தடை விதிக்கபட்டுள்ளதால் ஆட்டோ ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீனா உட்பட சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் கோவிட்-19 மிக வேகமாக பரவி வருகின்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. 90வது ஆண்டாக நடைபெறவிருந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் பல்வேறு புதிய கார் தயாரிப்புகள் வெளியாக இருந்த நிலையில் இப்போது அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதால் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் கட்டணத்தை திருப்பிச் செலுத்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய அறிமுகங்களை ஆட்டோ ஷோவுக்கு மாற்றான இடத்தில் தனித்தனியாக வெளியிட உள்ளன.

source – gims

Exit mobile version