Automobile Tamilan

நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைப்பு.!

hyundai venue suv

கொரோனா வைரஸ் எதிரொலியால் சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோ ஷோ உட்பட பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றது. அந்த வகையில் நியூயார்க் ஆட்டோ ஷோ ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முன்பாக ஆட்டோ ஷோ வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும். இந்த ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த ஏப்ரல் முதல் வாரமாகும். ஆனால் சீனாவில் துவங்கிய கோவிட்-19 வைரஸ் காரணமாக சமீபத்தில் ஜெனிவா மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நியூ யார்க் மோட்டார் ஷோ தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் பார்வைக்கு ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டுள்ளது.

எங்கள் பங்கேற்பாளர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க உதவும் இந்த அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள நடவடிக்கையை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று கிரேட்டர் நியூயார்க் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷனின் தலைவர் மார்க் ஷியன்பெர்க் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version