மாருதி சூப்பர் கேரி எல்சிவி வருகை – ஆட்டோ எக்ஸ்போ 2016

மாருதி சுசூகி நிறுவனத்தின் சிறியரக வர்த்தக வாகனம் சூப்பர் கேரி மினி டிரக் உற்பத்தி நிலை மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2016யில் பார்வைக்கு வருகின்றது. சூப்பர் கேரி மினி டிரக் டாடா ஏஎஸ் , மஹிந்திரா மேக்ஸிமோ போன்றவைக்கு போட்டியாக அமையும்.

சூப்பர் கேரி அல்லது வேறு பெயரிலோ இந்த மினி டிரக் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் இது மாருதி ஷோரூம் வழியாக விற்பனை செய்யப்படாமல் புதிதாக டீலர்கள் அமைக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகும்.

47 bhp ஆற்றல் மற்றும் 120 Nm டார்க் வெளிப்படுத்தும் செலிரியோ காரில் உள்ள 792சிசி என்ஜினுடன் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர சிஎன்ஜி ஆப்ஷனில் பயன்படுத்தும் வகையில் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வருகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் உற்பத்தி நிலை மாடல் பார்வைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து விற்பனைக்கு வரும் விபரங்கள் அறிவிக்கப்படலாம். எனவே மாருதி எல்சிவி ஆகஸ்ட் மாதம் அதிகார்வப்பூர்வமாக சந்தையில் கிடைக்கும்.

1 டன் எடை தாங்கும் திறனை கொண்டிருக்கும் சூப்பர் கேரி எல்சிவி வாகனத்தின் போட்டியாளர்கள் டாடா ஏஸ் , மஹிந்திரா மேக்சிமோ , ஐஷர் மல்டிக்ஸ் மற்றும் மஹிந்திரா ஜீட்டோ ஆகும்.

Maruti super carry LCV to debut on Auto expo 2016

Exit mobile version