Automobile Tamilan

வால்வோ S90 சொகுசு செடான் அறிமுகம்

புதிய வால்வோ S90 சொகுசு செடான் காரை வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்துளது. வால்வோ எஸ்90 செடான் வரும் ஜனவரி 2016 டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது. இந்திய சந்தைக்கும் எஸ்90 பிரிமியம் செடான் வரவுள்ளது.

Volvo-S90

பல நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சிறப்பான சொகுசு வசதிகளை கொண்டுள்ள எஸ்90 காரில் வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி காரின் தாத்பரியங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய தோர் வடிவ சுத்தியலை தனது புதிய மாடல்களில் முகப்பு விளக்கில் பயன்படுத்தி வருகின்றது.

முகப்பில் பாரம்பரிய கிரிலுடன் தோர் சுத்தி வடிவ முகப்பு விளக்குகள் சிறப்பான தோற்றத்தினை S90 செடான் காருக்கு வழங்கி உள்ளது. பக்கவாட்டில் மிக நீளமான புராஃபைல் கோடுகளுடன் 10 ஸ்போக் கொண்ட அலாய் வீல்கள் சிறப்பாக உள்ளது. பின்புறத்தில் E வடிவ எல்இடி டெயில் விளக்குளுடன் சிறப்பாக அமைந்துள்ளது . இரட்டை புகைப்போக்கியை பெற்றுள்ளது.

எக்ஸ்சி90 எஸ்யூவி காரின் சில தாத்பரியங்களை கொண்டு விளங்கும் உட்புறத்தில் நேரரியாக கட்டமைக்கப்பட்ட மர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான டேஸ்போர்டினை பெற்று விளங்குகின்றது. தொடுதிரை இன்ஃபோடெயின் மென்ட் அமைப்பில் நவீன கார் அம்சங்கள் மற்றும் செயற்கைகோள் தொடர்பு நேவிகேஷன் அமைப்பு போன்றவை உள்ளது.

வால்வோ S90 செடான் காரில் T8 ட்வீன் என்ஜின் ஹைபிரிட் பிளக்-இன் 2.0 லிட்டர் சூப்பர்சார்ஜடு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் என்ஜின் ஆற்றல் 318 ஹெச்பி  , 80 ஹெச்பி  எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 46 ஹெச்பி ஆற்றலை கிராங்சாஃப்டில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டார்ட்ர் மோட்டார் என இரண்டும் இணைந்து 394ஹெச்பி ஆற்றலை வழங்குகின்றது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

 

நெடுஞ்சாலையில் குறிப்பிட்ட லேனில் மணிக்கு 130கிமீ வேகத்தில் பயணிக்க உதவியாக பைலட் சிஸ்டம் இருக்கும். செமி தானியங்கி முறை பாதுகாப்பு , புதிய லார்ஜ் அனிமல்ஸ் சிஸ்டம் நகர பாதுகாப்பில் உள்ளது. இதன் மூலம் குதிரை , எருதுகள் போன்றவற்றை அறிந்து அதற்கேற்ப எச்சரிக்கை மற்றும் பிரேக் உதவியை பகல் மற்றும் இரவு என இரண்டிலும் வழங்கும்.

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் , மெர்சிடிஸ் இ கிளாஸ் , ஆடி ஏ6 மற்றும் ஜாகுவார் XF மாடல்களுக்கு போட்டியாக வால்வோ எஸ்90 விளங்கும்.

வரும் டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியல் பார்வைக்கு வருகின்றது. இந்தியாவில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலும் பார்வைக்கு வரலாம். அதனை தொடர்ந்து இந்தய சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

Exit mobile version