Automobile Tamilan

2017 போர்ஷே பனமேரா செடான் காரின் டீஸர் வெளியீடு

வரவிருக்கும் 2017 போர்ஷே பனமேரா சொகுசு செடான் காரின் டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது.  போர்ஷே பனமேரா டீஸரில் காரின் பின்புற தோற்ற அமைப்பின் எல்இடி டெயில் லைட் வெளியாகியுள்ளது.

2017-porsche-panamera-teased

புதிய போர்ஷே பனமேரா காரின் தோற்ற அமைப்பு முற்றிலும் மேம்படுத்தப்பட்டு MSB பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. என்ஜின் ஆப்ஷனில் புதுப்பிக்கப்பட்ட V6 மற்றும் V8 என்ஜின்களை பெற்றிருக்கும்.  என்ஜின்களில் பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷனை பெற்றிருக்கும். 4 கதவுகளை கொண்ட பனமெரா செடான் காரில் உட்புறத்தில் 12 இன்ச் தொடுதிரை  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தினை பெற்றிருக்கும்.

முந்தைய மாடலை விட 100 கிலோ எடைகுறைவான மாடலாக விளங்கும் புதிய பனமெரா காரின் டிசைன் தாத்பரியங்கள் போர்ஷே 911 காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 2016 பாரீஸ் மோட்டார் ஷோவில் முதன்முறையாக பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து 2017 போர்ஷே பனமெரா விற்பனைக்கு வரவுள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=n7FaAUrBwVo]

Exit mobile version