கவாஸாகி வெர்சிஸ் 650 பைக் விற்பனைக்கு வந்தது

கவாஸாகி வெர்சிஸ் 650 ஸ்போர்ட்டிவ் அட்வென்ச்சர் டூரிங் பைக் ரூ.6.6 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கில் 68 ஹெச்பி ஆற்றலை வழங்கும் சகதிவாய்ந்த என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

நின்ஜா 650 பைக்கினை அடிப்படையாக கொண்ட கவாஸாகி வெர்சிஸ் 650 அட்வென்ச்சர் பைக்கில் இரட்டை பிரிவு முகப்பு விளக்குகளுடன் மிக நேர்த்தியான அட்வென்ச்சர் ஸ்டைலில் அமைந்துள்ளது. இந்தியாவில் சிகேடி முறையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

68ஹெச்பி ஆற்றலை வழங்கும் 649சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 63.7 என்எம் ஆகும் இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

வெர்சிஸ் 650 பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யும் தன்மை கொண்ட வின்ட்ஷீல்டு , 17 இஞ்ச் அலாய் வீல் , வெப்பத்தினால் பெட்ரோல் ஆவியாகுவதனை தடுக்கும் 21 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் , முன்புறத்தில் அப்சைட் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறத்தில் மோனோ சாக் அப்சார்பர் மற்றும் முன்புறத்தில் 300மிமீ இரட்டை டிஸ்க் பிரேக் , பின்புறத்தில் 250 மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக் , மேலும் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திலிருந்து பாகங்களை இறக்குமதி செய்து இந்தியாவில் ஒருங்கினைக்கப்படும் கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கின் விலை ரூ.6.60 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி)

கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கின் போட்டியாளர்கள் பெனெல்லி டிஎன்டி 600ஜிடி மற்றும் ஹோண்டா CBR650F ஆகும்.

[envira-gallery id=”7179″]

Exit mobile version