டிவிஎஸ் ஸ்டார் சிட்டி + சிறப்பு பதிப்பு அறிமுகம்

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி + பைக்கில் சிறப்பு கோல்டன் எடிசன் பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனைக்கு வந்துள்ளது.  டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டை விட ரூ.2000 கூடுதலாக இருக்கும்.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி +
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி +
ஸ்டார் சிட்டி + கோல்டன் சிறப்பு பதிப்பில் சில கூடுதல் துனைகருவிகள் மற்றும் பாடி கிராஃபிக்ஸ் மட்டுமே பெற்றுள்ளது. என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை.
சிறப்பு கோல்டன் பதிப்பின் தோற்றத்தில் வெள்ளை வண்ணத்தில் தங்க நிற கலவை கிராஃபிக்ஸ் , தங்க நிற மேக் வீல் , தங்க நிற முப்பரிமான லோகோ , தங்க நிற டிவிஎஸ் லோகோ வைசர் , சிகப்பு வண்ண சாக் அப்சார்பர் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பைக் ஆஃப் தி இயர் ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. ஸ்டார் சிட்டி + சிறப்பு பதிப்பபில் கூடுதலாக டீயூப்லஸ் டயர் மற்றும் யூஎஸ்பி சார்ஜர் போன்றவை பெற்றுள்ளது. 
8.4பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 110சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 8.7என்எம் ஆகும் இதில் 4 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர். டிவிஎஸ் ஸ்டார் சிட்டி + பைக் மைலேஜ் லிட்டருக்கு 86கிமீ ஆகும்.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி +  கோல்டன் பதிப்பு விலை ரூ. 49,500 [சென்னை எக்ஸ்ஷோரூம்}

TVS Star city + Special Gold Edition 2015
Exit mobile version