Bike News

ட்ரையம்ஃப் டைகர் XR பைக் விற்பனைக்கு வந்தது

இந்தியாவில் புதிய ட்ரையம்ஃப் டைகர் XR அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிலை ட்ரையம்ஃப் டைகர் XR பைக் விலை ரூ. 10.50 லட்சம் ஆகும்.
ட்ரையம்ஃப் டைகர் XR பைக்

ட்ரையம்ஃப் டைகர் XR பைக்கில் சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தினை பெற முடியும். அட்வென்ச்சர் ரக ட்ரையம்ஃப் டைகர் XR பைக்கினை , இந்தியாவில் பாகங்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்யப்படுகின்றது.

டைகர் எக்ஸ்ஆர் பைக்கில் 94எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 3 சிலிண்டர் கொண்ட 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 79என்எம் ஆகும்.

ட்ரையம்ஃப் டைகர் XR பைக்கில் தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ள கூடிய ஏபிஎஸ் பிரேக் மற்றும் டிராக்‌ஷன் கட்டுப்பாட்டினை கொண்டுள்ளது.

4 விதமான த்ராட்டில் மேப் ஆப்ஷனை பெற்றுள்ளது. அவை ரோடு , மழை , ஸ்போர்ட்டிவ் மற்றும் ஆஃப் ரோடு ஆகும்.

மூன்று விதமான ரைட் ஆப்ஷன் உள்ளது. அவை ரோடு , ஆஃப் ரோடு மற்றும் நம் விருப்பமான ரைட் ஆப்ஷன்.

ட்ரையம்ஃப் டைகர் XR பைக்

முன்புறத்தில் 17 இஞ்ச் ஆலாய் வீல் மற்றும் பின்புறத்தில் 19 இஞ்ச் ஆலாய் வீலை கொண்டுள்ளது. இருக்கையின் உயரத்தை 20மிமீ வரை மாற்றி அமைத்து கொள்ளமுடியும்.

ட்ரையம்ஃப் டைகர் XR பைக் விலை ரூ.10.50 லட்சம் (ex-showroom Delhi)

Triumph Motorcycle Tiger XR adventure launched in India

Share
Published by
MR.Durai