பஜாஜ் டோமினார் 400 க்ரூஸர் பைக் விரைவில்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய 400சிசி பைக்கினை பஜாஜ் க்ராடோஸ் என அறியப்பட்ட வந்த நிலையில் புதிய பிராண்டாக பஜாஜ் டோமினார் 400 (Bajaj Dominar 400) பெயரில் டிசம்பர் மாத மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும் என தெரிகின்றது.

 

பல்சர் சிஎஸ்400 என 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தபட்ட க்ரூஸர் ரக ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிள் மாடல் சமீபத்தில் விஎஸ்400 என உறுதியாகி நிலையில் பல்சர் பிராண்டு அல்லாத புதிய பிராண்டினை விஎஸ்400 பைக்கிற்கு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் உறுதி செய்யப்படாத நம்பகமான தகவலாக பஜாஜ் நிறுவனத்தின் புதிய பிராண்டாக க்ராடோஸ் என அறியப்பட்ட நிலையில் தற்ப்பொழுது ஆதிக்கம் என பொருள் அறியும் வகையில் டோமினார் என்ற புதிய பெயரில் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய டாமினார் பிராண்டில் முதல் மாடலாக VS400 பைக் இடம்பெற உள்ளது. VS என்றால் Vantage Sports ஆகும்.  டோமினார் விஎஸ்400 பைக்கில் கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம் பெற்றுள்ள அதே இன்ஜினை ட்யூன் செய்து 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம். விஎஸ்400 பைக்கின் எடை 332 கிலோகிராம் ஆகும். டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 155 கிமீ ஆக இருக்கலாம்.

எல்இடி ஹெட்லேம்ப் , முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்பிக்கத்தில் னோனோஷாக் அப்சார்பரை , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ட்யூவல் சேனல் ஏபிஎஸ் என பல வசதிகளை பெற்றுள்ளது. ரூ. 2 லட்சம் ஆன்ரோடு விலையில் பஜாஜ் டோமினார் விஎஸ்400 க்ரூஸர் பைக் விற்பனைக்கு டிசம்பர் மாதம் வரவுள்ளது.