மஹிந்திரா மோஜோ புதிய மஞ்சள் நிறத்தில் அறிமுகம்

மஹிந்திரா இருசக்கர வாகன பிரிவின் மஹிந்திரா மோஜோ அட்வென்ச்சர் டூரிங் பைக்கில் புதிதாக மஞ்சள் நிறத்தில் (Sunburst yellow) விற்பனைக்கு வந்துள்ளது. தற்பொழுது 4 வண்ணங்களில் மோஜோ பைக் கிடைக்கின்றது.

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மஞ்சள் நிற வண்ணத்தை விற்பனையில் சேர்த்துள்ளதால் முந்தைய வண்ணங்களான கருப்பு , வெள்ளை மற்றும் சிவப்பு என மொத்தம் 4 வண்ணங்களில் கிடைக்கின்றது.

எவ்விதமான தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வண்ணத்தை மட்டுமே பெற்றுள்ள மோஜோ பைக்கில் 27 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 30 Nm ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக் உச்ச வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரியாக மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கும். முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர்.

தற்பொழுது ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை . ஏபிஎஸ் பிரேக் மாடல் தற்பொழுது சோதனையில் உள்ளதால் அடுத்த வருடத்தின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்பொழுது மஹிந்திரா மோஜோ வாடிக்கையாளர்களுக்கு டெசர்ட் ட்ரெயில் போட்டியை அறிவித்துள்ளது. இதற்கு முன்பதிவினை தனது இணையத்தில் தொடங்கியுள்ளது.

ஜாவா பைக்குகள் மீண்டும் வருகை ?

 

Exit mobile version