யமஹா FZ25 பைக் விலை ரூ.1.19 லட்சம்

யமஹா இந்தியா நிறுவனம் எஃப்இசட் வரிசையில் யமஹா FZ25 பைக் ரூ.1.19 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. புதிய யமஹா எஃப்இசட்25 மாடலில் 20.9 ஹெச்பி ஆற்றல் தரவல்ல 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

மிக நேர்த்தியான ஸ்டீரிட் ஃபைட்டர் பைக் மாடலாக வந்துள்ள எஃப்இசட்25 எல்இடி ஹெட்லேம்ப் வசதியுடன் எல்இடி டெயில் விளக்கு ,எல்சிடி டிஸ்பிளே இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மீட்டருடன் கருப்பு , வெள்ளை மற்றும் நீலம் போன்ற வண்ணங்களில் கிடைக்க உள்ளது.

யமஹா  எஃப்இசட்25 எஞ்சின்

யமஹாவின் புளூ கோர் எஞ்சின் நுட்பத்துடன் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் 249சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 20.9 ஹெச்பி பவரையும் 20 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஒரு லிட்டருக்கு 43 கிமீ மைலேஜ் வெளிப்படுத்தும் மாடலாக விளங்கும் FZ25 பைக்கில் முன்பக்க டயரில் 282மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 220 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.  148 கிலோ எடை கொண்ட எஃப்இசட் 25 பைக்கில் 14 லிட்டர் கொள்ளளவுகொண்ட எரிபொருள் கலன் மற்றும் 160 மீமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றதாக உள்ளது.

 

எஃப்இசட்25 விலை

யமஹா FZ25 பைக் விலை ரூ.1,19,500 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

போட்டியாளர்கள்

பல்சர் 200NS, டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 4V, கேடிஎம் 200 டியூக் மற்றும் பஜாஜ் டோமினார் 400 போன்ற பைக்குகளுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் மாடலாக யமஹா FZ25 பைக் அமைந்துள்ளது.

 

[foogallery-album id=”16186″]

Share
Tags: FZ25Yamaha