Automobile Tamil

ராயல் என்பீல்டு புல்லட் 500

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 மாடலில் புதிதாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.  புல்லட் 500 யில் சென்சார் பொருத்தப்பட்ட கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.  முன்பு பயன்படுத்தப்பட்ட அதே எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

500 புல்லட்டில் கூடுதலாக சிலவற்றை மாறுதல் செய்துள்ளது. புதிய முகப்பு விளக்குகள் இதனை புலி கண் விளக்குகள் என அழைக்கின்றது.  டேங்கின் வின்ஜடு பேட்ஜ் ரீடிசைன் செய்துள்ளனர். எலெக்ட்ரிக் ஸ்டார்ட்,மிகவும் சிறப்பான கிளாசிக் லுக்கினை தரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

Royal Enfield Bullet 500

முன்புறம் 19 இன்ச் வீல், பின்புறம் 18 இன்ச் வீல் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பைக்கானது பச்சை வண்ணத்தில் (ஃபாரஸ்ட் கீரின்) மட்டும் கிடைக்கும். முன்புறத்தில் 280 மீமி டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 153 மீமி பயன்படுத்தப்பட்டுள்ளது.

யூசிஇ (கார்புரேட்டர்) எஞ்சின்

499 சிசி சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 26.1 பிஎச்பி வெளிப்படுத்தும். இதன் டார்க் 40.9 என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

முன்புள்ள கிளாசிக் 500 ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் எஞ்சின்

499 சிசி சிங்கிள் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச ஆற்றல் 27.2 பிஎச்பி வெளிப்படுத்தும். இதன் டார்க் 41.3 என்எம் ஆகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

விரைவில் ஷோரூம்களுக்கு வரலாம். விலை விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்பொழுது  விற்பனையில் உள்ள கிளாசிக் 500 மாடலை விட குறைவாக இருக்கும்.

Exit mobile version