ஹோண்டா நவி விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2016

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் ஹோண்டா நவி மினி மோட்டார்சைக்கிள் ரூ.39,500 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. நவி ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் என இரண்டுக்கு மத்தியில் க்ராஸ் ரக மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டீரிட் , ஆஃப் ரோடு , அட்வென்ச்சர் என மூன்று விதமான ஆப்ஷன்களுடன் வந்துள்ள நவி பைக்கில் கஸ்டமைஸ் மற்றும் சாதரன ஆப்ஷனும் உள்ளது. இளம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவி அப்ளிகேஷன் வாயிலாக முன்பதிவு நடந்து வருகின்றது.

நவி பைக்கில் 7.8bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 109.2cc என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஆக்டிவா ஸ்கூடரரில் உள்ள அதே HET என்ஜினாகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.   நீளம் 1854மிமீ , அகலம் 748மிமீ மற்றும் உயரம் 1039மிமீ ஆகும். மிக இலகுகுவான எடை கொண்ட 101 கிலோ மட்டுமே கொண்டுள்ள நாவி பைக்கில் இருபக்கங்களிலும் டிரம் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க சஸ்பென்ஷன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்புறம் ஒற்றை சாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

ஸ்கூட்டர் தாத்பரியங்கள் , மோட்டார்சைக்கிள் , ஆஃப் ரோடு பைக்குகள் என அனைத்து டிசைன் வடிவங்களில் இருந்தும் டிசைன் கூறுகளை பெற்று இந்தியாவின் ஹோண்டா ஆர்&டி மூலம் உருவாக்கப்பட்ட ஹோண்டா நவி பைக்கின் முன்புறத்தில் என்ஜின் அருகாமையில் ஸ்டோரேஜ் அமைப்பு உள்ளது.

ஹோண்டா நவி பைக் படங்கள் இந்த படங்களில் ஸ்டான்டர்டு , ஆஃப் ரோடு , ஸ்டீரிட் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

[envira-gallery id="5902"]

 

Share