• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 இந்தியா வந்தது

by MR.Durai
20 October 2015, 3:43 am
in Bike News
0
ShareTweetSend
எம்வி அகுஸ்டா சூப்பர் பைக் நிறவனம் கைனெடிக் குழுமத்துடன் இணைந்து எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 சூப்பர் பைக்கினை ரூ.17.99 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும் எம்வி அகுஸ்டா F3 800 மாடலை அறிமுகம் செய்துள்ளது.
எம்வி அகுஸ்டா புரூடேல் 1090

இத்தாலியை சேர்ந்த MV அகுஸ்டா S.P.A நிறுவனம் இந்தியாவின் கைனெடிக் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் சூப்பர் பைக்குகள் விற்பனையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் , விற்பனை, சர்வீஸ் உதிரிபாகங்கள் மற்றும் டீலர்களை கைனெடிக் நிர்வகிக்கும்.

எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக்கில் 144ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1078சிசி 4 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 112என்எம் ஆகும். இதில் 6வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக்கில் 8 விதமான டிராக்‌ஷன் கட்டுப்பாடு , ஏபிஎஸ் போன்றவற்றை பெற்றுள்ளது. எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 265கிமீ ஆகும்.

எம்வி அகுஸ்டா புரூடேல் 1090 பைக் விலை ரூ.17.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம் புனே)

எம்வி அகுஸ்டா F3 800

உலகின் மிக சிறந்த வடிவத்தினை பெற்ற சூப்பர் பைக்குகளில் தனியான இடத்தினை பிடித்துள்ள எம்வி அகுஸ்டா எஃப்3 800 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
ஒற்றை முகப்பு விளக்குகள் , மூன்று புகைப்போக்கிகள் , போன்றவற்றை பெற்றுள்ள F3 800 பைக்கில் 148ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 798சிசி 3 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 88என்எம் ஆகும்.

எம்வி அகுஸ்டா எஃப்3 800 பைக்கிலும் 8 விதமான டிராக்‌ஷன் கட்டுப்பாடு , ஏபிஎஸ் போன்றவற்றை நிரந்தர அம்சமாக பெற்றுள்ளது. எம்வி அகுஸ்டா F3 800 பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 269கிமீ ஆகும்.

இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் தொடக்கத்திலோ  எம்வி அகுஸ்டா F3 800 ரூ.21 லட்சம் விலையில் விற்பனைக்கு வரலாம்.

” மோட்டார் ராயல் ” என்ற பெயரில் நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களில் கைனெடிக் டீலர்களை அமைக்க உள்ளது. முதற்கட்டமாக முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது. மேலும் பல சூப்பர் பைக்குகளை எம்வி அகுஸ்டா இந்தியா கொண்டு வரவுள்ளது.

எம்வி அகஸ்டா F4 பைக் விலை ரூ.25.50 லட்சம்

Tags: MV Agusta
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version