சிஎன்ஜி ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்தது – மும்பை

மும்பை மாநகரில் ஈகோ ஃப்யூவல் மற்றும் மஹாநகர் கேஸ் நிறுவனமும் இணைந்து சிஎன்ஜி ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 60 பைசா செலவில் ஒரு கிலோமீட்டர் பயணத்தை சிஎன்ஜி ஸ்கூட்டர்கள் தரவல்லதாகும்.

இத்தாலியின் லோவாடோ கூட்டணி நிறுவனமாக விளங்கும் ஈகோ ஃப்யூவல் மற்றும் மஹாநகர் கேஸ் நிறுவனமும் (Mahanagar Gas Limited – MGL) சேர்ந்து சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையிலான உபகரணங்களை தானியங்கி ஸ்கூட்டர்களுக்கு வழங்க உள்ளது. முதற்கட்டமாக 18 ஸ்கூட்டர் மாடல்களுக்கு லோவாடோ இந்திய iCAT மையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட உள்ள இரண்டு சிஎன்ஜி சிலிண்டர்களும்  1.2 கிலோ எடை கொண்டதாகும். முழுமையாக சிஎன்ஜி நிரம்பி இரு சிலிண்டர்களும் இணைந்து 110 கிலோமீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என உறுதி செய்ப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் செலவை விட மிக குறைவான விலையிலே அதாவது ஒரு கிலோமீட்டர் பயணக்கு 60 பைசா மட்டுமே ஆகும்.

இந்த சிஎன்ஜி கிட் பொருத்துவதற்கு மூன்று மணி நேரம் ஆகும். இந்த சிஎன்ஜி கிட் விலை ரூ.15,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. லோவாடா அனுமதி பெற்ற 18 ஸ்கூட்டர்கள் பட்டியல்

மேலும் சிஎன்ஜி மையங்களை கண்டறிய எம்ஜிஎல் புதிய ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன் வாயிலாக சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களை கண்டுபிடிக்கலாம்.

சிஎன்ஜி கிட் விபரம்

Exit mobile version