டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் படங்கள் மற்றும் நுட்ப விபரங்கள் கசிந்தது

வருகின்ற டிசம்பர் 6ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஸ்போர்ட்டிவ் ரக டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310 பைக்

பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் கூட்டணியுடன் டிவிஎஸ் மோட்டார் இணைந்து தயாரித்த பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஆர்ஆர் 310 பைக்கில் 313 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 34 ஹெச்பி ஆற்றல் மற்றும் 28 என்எம் டார்க் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் ஆற்றலை எடுத்துச் செல்ல 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கலாம்.

சமீபத்தில் மெட்டராஸ் மோட்டார் டிராக் பந்தய களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

இரட்டைப் பிரிவு எல்இடி முகப்பு விளக்குடன் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்குடன், தங்க நிறத்துடன் கூடிய யூஎஸ்டி ஃபோர்க்குகள், 17 அங்குல அலாய வீல் 5 ஸ்போக்குகளுடன் கூடிய பைரேலி டயர் பெற்றதாக வரவுள்ளது.

டிசம்பர் 6ந் தேதி காலை 11.00 மணிக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள அப்பாச்சி 300 பைக்கின் விலை ரூ.2.00 லட்சம் விலைக்குள் அமையலாம். கேடிஎம் ஆர்சி 390, கவாஸாகி நின்ஜா 300 மற்றும் பெனெல்லி 302R ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் அமைந்திருக்கின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி RR 310  நுட்ப விபரம்

நன்றி – Bikers memes tamil

Exit mobile version