பிளாட்டினா மற்றும் CT100 பைக்குகளில் புதிய வேரியன்ட் அறிமுகம்

பஜாஜ் பிளாட்டினா பைக் வரிசையில் குறைந்த விலை வேரியன்ட் மற்றும் பஜாஜ் CT100 பைக்கில் விலை உயர்ந்த டாப் வேரியன்ட் மாடல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. தோற்ற அமைப்பு மற்றும் பவர், டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.

 

பஜாஜ் பிளாட்டினா

பிளாட்டினா மாடலில் ES ஸ்போக் வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டு ஸ்போக் வீல் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட்போன்ற அம்சங்களை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் 8.1bhp மற்றும் 8.6Nm டார்க்கினை வழங்கும் 102 சிசி டிடிஎஸ்-ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பேஸ் வேரியன்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிளாட்டினா புதிய வேரியன்டின் விலை ரூ.42,650 மட்டுமே (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

பஜாஜ் CT100

இந்தியாவின் குறைந்த விலை பைக் என அறியப்படுகின்ற பஜாஜ் சிடி 100 மாடலில்  8.1bhp மற்றும் 8.5Nm டார்க்கினை வழங்கும் 99.3சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடல்களை விட கூடுதலான அம்சங்களாக எல்க்ட்ரிக் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல்கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.இது சாதரன மாடலை விட ரூ. 3,000 வரை கூடுதலாக விலையில் விற்பனைக்கு கிடைக்க பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

டாப் வேரியன்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சிடி 100 புதிய வேரியன்டின் விலை ரூ.41,997 மட்டுமே (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

 

Exit mobile version