Site icon Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 புல்லட்டில் புதிய வண்ணம்

கடந்த 1950 முதல் இந்திய விமானப்படை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 புல்லட்டை பயன்படுத்தி வருகின்றது. அதனை நினைவுகூறும் வகையில் ஸ்குவாட்ரன் நீல வண்ணத்தில் கிளாசிக் 500 புல்லட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு உதவி ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் முக்கிய பங்கு வகித்தது. அதனை தொடர்ந்து முதன்முறையாக இந்திய விமானப்படை 1952 ஆம் ஆண்டில் முதன்முறையாக 800 மோட்டார்சைக்கிள்களை வாங்கியது. அதனை தொடர்ந்து 1955 ஆம் ஆண்டு முதல் ராயல் என்ஃபீல்டு தொடர்ந்து ராணுவத்திற்கு சப்ளை செய்து வருகின்றது.

27.2 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 499சிசி சிங்கிள் சிலிண்டர் ட்வின் ஸ்பார்க் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 41.3 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

விற்பனையில் உள்ள மற்ற வண்ணங்களுடன் கூடுதலாக வந்துள்ள ஸ்குவாட்ரன் நீல வண்ணத்தின் விலை ரூ.1,89,350 (விலை சென்னை ஆன்-ரோடு)ஆகும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 Squadron Blue விலை –

ரூ. 1,89,350/- சென்னை

ரூ. 1,98,649/- பெங்களூரூ

ரூ. 1,96,700/- கோல்கத்தா

ரூ. 1,93,972/- மும்பை

( அனைத்தும் ஆன் ரோடு விலை )

 

Exit mobile version