Automobile Tamil

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விற்பனைக்கு வந்தது

ரூ.1.55 லட்சம் விலையில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்வென்ச்சர் பிரிவில் ஹிமாலயன் பைக் வாயிலாக ராயல் என்ஃபீல்டு நுழைந்துள்ளது.

Royal-Enfield-Himalayan-side-view

மிக சிறப்பான ஆஃப்ரோடு பெர்ஃபாமென்ஸ் வழங்ககூடிய பைக்காக வந்துள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கில் 24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

அதிகபட்ச ஆற்றலை வழங்கும் ஹிமாலயன் பைக்கின் பராமரிப்பு செலவு மிக குறைவாக இருக்கும். ஒவ்வொரு 10,000 கிமீக்கு ஒருமுறை ஆயில் மாற்றினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க; தமிழகத்தில் மஹிந்திரா மோஜோ பைக் விலை விபரம்

200 மிமீ டிராவல் வகையிலான  41 மிமீ டெலஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் முன் சக்கரத்தில் பொருத்தபட்டுள்ளது. பின் சக்கரத்தில்,மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது. இதன் 2-பிஸ்டன் கேளிப்பர்கள் கொண்ட 300 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பின் சக்கரத்தில், சிங்கிள் பிஸ்டன் கேளிப்பர் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக் பொருத்தபட்டுள்ளது. இரு சக்கரங்களிலும் ரிம் ஸ்போக்குகளை பெற்றுள்ளது. இதன் முன் சக்கரம், 21 இஞ்ச் மற்றும் பின் சக்கரம், 18 இஞ்ச் கொண்டுள்ளது.

ஆஃப்ரோடு பயணத்திற்கு மட்டுமல்லாமல் தொலைதூரம் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் லக்கேஜ் எடுத்து செல்ல துனை பெட்டிகள் , கேன்களை முன்புறம் மாட்டிக்கொள்ளும் வசதி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது.

ஹிமாலயன் மோட்டார்சைக்கிளுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை . மேலும் குறைந்த விலை கொண்ட அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளாக ஹிமாலயன் விளங்குகின்றது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் விலை ரூ.1.55 லட்சம் { எக்ஸ்ஷோரூம் மும்பை } பிஎஸ்3 என்ஜினை பெற்றுள்ள ஹிமாலயன் பைக் டெல்லியில் விற்பனை செய்ய இயலாது.

[envira-gallery id=”5636″]

Exit mobile version