Site icon Automobile Tamilan

ஹோண்டா சிபி டிரிக்கர் 150 சிசி பைக்

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர் இந்தியா சிபி டிரிக்கர் 150 சிசி பைக்கினை அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ ஹங்க், யமாஹா எஃப்-இசட், பல்சர் 180 போன்ற பைக்களுக்கு சவாலாக சிபி டிரிக்கர் 150 சிசி பைக் விளங்கும்.

ஹோண்டா சிபி டிரிக்கர் 150 சிசி பைக்  18-24வயது உள்ள இளைஞர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபி டிரிக்கர் 150 சிசி பைக் டேஸ்லர் பைக்கிற்க்கு மாற்றாக விளங்கும். சிபி டிரிக்கர் 150 சிசி பைக் காம்பி பிரேக் அமைப்பில்(CBS- combined braking system) வெளிவந்துள்ளது. சிபிஎஸ் பிரேக்கிங் அமைப்பு சாதரன பிரேக்கை விட 32 % குறைவான தூரத்திலே நிற்க்கும்.

4 ஸ்டோர்க் ,149.1 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் பயன்படுத்தியுள்ளனர். இதன் ஆற்றல் 14.41 எச்பி @ 8500rpm வரை வெளிப்படுத்தும். மற்றும் டார்க் 12.5என்எம் @ 6500rpm ஆகும்.

சிபி டிரிக்கர் 150 சிசி பைக்கில் பல வசதிகள் உள்ளன. அவை மோனோ-சாக் சஸ்பென்ஷன், டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் பெனல்,டீயூப்பலஸ் டயர், ஜீரோ பராமரிப்பு பேட்டரி, மற்றும் விஸ்க்ஸ் காற்று வடிப்பான்.

3 வேரியன்டில் வெளிவரும்.அவை ஸ்டான்டார்டு(முன்புறம் டிஸ்க் &பின்புறம் ட்ரம்),டீலக்ஸ்(முன்புறம்&பின்புறம் டிஸ்க்) மற்றும் சிபிஎஸ்(முன்புறம் டிஸ்க் &பின்புறம் சிபிஎஸ்).

சிபி டிரிக்கர் 150 சிசி பைக் மைலேஜ் 60kmpl  கிடைக்கும்.
சிபி டிரிக்கர் 150 சிசி ஏப்ரல் மாதம் வெளிவரும்.மே மாதம் டெலிவரி செய்யப்படும்.முன்பதிவு ஏப்ரல் மாதம் தொடங்கும்.

ஹோண்டா சிபி டிரிக்கர் 150 சிசி விலை விபரங்கள் அறிவிக்கப்படவில்லை

Exit mobile version