Automobile Tamilan

110cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற 110cc பிரிவில் உள்ள பைக்குகளின் என்ஜின் விபரம், மைலேஜ், சிறப்பம்சங்கள் மற்றும் தமிழ்நாடு ஆன்ரோடு விலை பட்டியலை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

100cc-125cc க்கு உள்ள 110cc என்ஜின் பெற்றுள்ள மாடல்களில் ஹீரோ பேஸன் புரோ, பேஸன் எக்ஸ்டெக், ஹோண்டா CD110 ட்ரீம், லிவோ, டிவிஎஸ் ஸ்போர்ட், ஸ்டார் சிட்டி பிளஸ், ரேடியான், பஜாஜ் பிளாட்டினா 110, CT110 போன்ற 9 மாடல்கள் விற்பனையில் கிடைத்து வருகின்றது.

2023 Hero Passion Pro

110cc சந்தையில் அதிகம் விற்பனை ஆகின்ற மாடல்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் பேஷன் புரோ 110 பைக்கில் மிக நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் பல்வேறு மாறுபட்ட நிறங்கள் கொண்டு 113.2cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு டிரம் மற்றும் டிஸ்க் என இருவிதமான பிரேக்கிங் ஆப்ஷனை பெறுகின்றது.

ஹீரோ பேஸன் புரோ மைலேஜ் 58-65Kmpl வரை கிடைக்கின்றது. ஹீரோ பேஷன் pro 110 எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 74,028 முதல் ₹ 77,128 வரை ஆகும்.

 Hero Passion Pro
Engine Displacement (CC) 113.2 cc Fi, Single Cylinder
Power 9.02 bhp at 7500 rpm
Torque 9.89 Nm at 5000 rpm
Gear Box 4 Speed

2023 ஹீரோ பேஷன் புரோ ஆன்-ரோடு விலை

2023 Hero Passion XTech

முதன்முறையாக 110cc பிரிவில் எல்இடி புராஜெக்டர் ஹெட்லேம்ப் கொண்ட ஹீரோ பேஷன் Xtech மாடலில் 113.2cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு டிரம் மற்றும் டிஸ்க் என இருவிதமான பிரேக்கிங் ஆப்ஷனை பெறுகின்றது. முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்ற இந்த மாடலில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் பல்வேறு வசதிகளை பெற முடியும்.

ஹீரோ பேஸன் எக்ஸ்டெக் மைலேஜ் 58-65Kmpl வரை கிடைக்கின்றது. ஹீரோ பேஷன் XTECH 110 எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 78,978 முதல் ₹ 82,678 வரை ஆகும்.

 Hero Passion Pro
Engine Displacement (CC) 113.2 cc Fi, Single Cylinder
Power 9.02 bhp at 7500 rpm
Torque 9.89 Nm at 5000 rpm
Gear Box 4 Speed

2023 ஹீரோ பேஷன் Xtech ஆன்-ரோடு விலை

2023 Honda CD110 Dream

110cc சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா நிறுவனத்தின் குறைந்த விலை மாடலான CD 110 ட்ரீம் பைக்கில் 109.51cc என்ஜின் பொருத்தப்பட்டு 8.67 bhp பவரை வழங்குகின்றது. இதில் பல்வேறு மாறுபட்ட நிறங்கள் கொடுக்கப்பட்டு டிரம் பிரேக் வசதி மட்டும் வழங்கப்படுகின்றது.

ஹோண்டா CD 110 ட்ரீம் மைலேஜ் 58-65Kmpl வரை கிடைக்கின்றது. ஹோண்டா CD 110 Dream எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 73,114 ஆகும்.

 Hero CD 110 Dream
Engine Displacement (CC) 109.51 cc Fi, Single Cylinder
Power 8.67 bhp at 7500 rpm
Torque 9.89 Nm at 5500 rpm
Gear Box 4 Speed

2023 ஹோண்டா CD 110 Dream Deluxe ஆன்-ரோடு விலை ₹ 88,150

2023 Honda Livo

ஹோண்டா நிறுவனத்தின் சற்று ஸ்டைலிஷான வசதிகள் பெற்று பிரீமியம் மாடலாக விளங்கும் லிவோ பைக்கில் 109.51cc என்ஜின் பொருத்தப்பட்டு 8.67 bhp பவரை வழங்குகின்றது. இந்த மாடலில் டிரம் மற்றும் டிஸ்க் என இரு விதமான பிரேக்கிங் ஆப்ஷன் உள்ளது.

ஹோண்டா லிவோ மைலேஜ் 57-60Kmpl வரை கிடைக்கின்றது. ஹோண்டா லிவோ 110 எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 78,321 முதல் ₹ 82,321 வரை ஆகும்.

 Honda Livo 110
Engine Displacement (CC) 109.51 cc Fi, Single Cylinder
Power 8.67 bhp at 7500 rpm
Torque 9.89 Nm at 5500 rpm
Gear Box 4 Speed

2023 ஹோண்டா லிவோ பைக்கின் ஆன்-ரோடு விலை

2023 TVS Sport

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் மாடல்களில் ஒன்றான டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கில் டிரம் பிரேக் இரு டயர்களிலும் வழங்கப்பட்டு, கிக் மற்றும் செல்ஃப் என இரண்டு ஸ்டார்டர் ஆப்ஷன்களை கொண்டு 109.7 cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் மைலேஜ் 65-70Kmpl வரை கிடைக்கின்றது. டிவிஎஸ் ஸ்போர்ட் 110 எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 63,535 முதல் ₹ 65,020, ₹ 70,803 வரை ஆகும்.

TVS Sport
Engine Displacement (CC) 109.7 cc Fi, Single Cylinder
Power 8.08 bhp at 7350 rpm
Torque 9.89 Nm at 4500 rpm
Gear Box 4 Speed

2023 டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்கின் ஆன்-ரோடு விலை

Sport Kick Start –  ₹ 77,987

Sport (ES) – ₹ 79,320

Sport (ELS) – ₹ 84,678

2023 TVS Star City+

ஸ்போர்ட் மாடலை விட சற்று கூடுதலான வசதிகளை பெற்ற எல்இடி ஹெட்லேம்ப் கொண்ட மற்றொரு பட்ஜெட் மாடலான டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ பைக்கில் 8.08 bhp பவரை வெளிப்படுத்தும் 109.7 cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் என இருவிதமாக பிரேக்கிங் ஆப்ஷனை பெற்றுள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் மைலேஜ் 65-70Kmpl வரை கிடைக்கின்றது. ஸ்டார் சிட்டி+ 110 எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 74,888 முதல் ₹ 78,038 வரை ஆகும்.

TVS Star city+
Engine Displacement (CC) 109.7 cc Fi, Single Cylinder
Power 8.08 bhp at 7350 rpm
Torque 9.89 Nm at 4500 rpm
Gear Box 4 Speed

2023 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

Dual Tone Drum ₹ 91,567

Dual Tone Disc ₹ 95,856

2023 TVS Radeon

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ரேடியான் பைக்கில் 8.08 bhp பவரை வெளிப்படுத்தும் 109.7 cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் என இருவிதமாக பிரேக்கிங் ஆப்ஷனை பெற்றுள்ளது. எல்சிடி ரிவர்ஸ் டிஜிட்டல் கிளஸ்ட்டர் பல்வேறு வசதிகளை பெற்றதாக உள்ளது.

ரேடியான் பைக்கின் மைலேஜ் 58-65Kmpl வரை கிடைக்கின்றது. டிவிஎஸ் ரேடியான் 110 எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 71,688 முதல் ₹ 76,310, மற்றும் 80,310 வரை ஆகும்.

TVS Radeon
Engine Displacement (CC) 109.7 cc Fi, Single Cylinder
Power 8.08 bhp at 7350 rpm
Torque 9.89 Nm at 4500 rpm
Gear Box 4 Speed

2023 டிவிஎஸ் ரேடியான் பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

Base Edition -₹ 88,890

Digi Drum – ₹ 94,310

Digi Disc – ₹ 98,910

2023 Bajaj Platina 110 ABS

110cc சந்தையில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற ஒரே மாடலாக விளங்குகின்ற பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக்கில் 115.45cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.48 bhp பவரை வெளிப்படுத்துகின்றது. மேலும் 5 வேக கியர்பாக்ஸ் கொண்ட ஒரே 110cc மாடலாகும். இதில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

பிளாட்டினா 110 டிரம் மற்றும் பிளாட்டினா 110 ஏபிஎஸ் மைலேஜ் 65-70kmpl வரை வெளிப்படுத்துகின்றது. ஏபிஎஸ் மாடல் ₹ 74,253 மற்றும் டிரம் பிரேக் வேரியண்ட் ₹ 70,662 ஆகும்.

Bajaj Platina 110 ABS
Engine Displacement (CC) 115.45 cc Fi, Single Cylinder
Power 8.48 bhp at 7000 rpm
Torque 9.81 Nm at 6000 rpm
Gear Box 5 Speed

2023 பஜாஜ் பிளாட்டினா 110 ஏபிஎஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை

platina 110 Drum – ₹ 88,865

Platina 110 ABS – ₹ 95,160

2023 Bajaj CT110X

பஜாஜ் ஆட்டோவின் புதிய CT110X பைக்கில் 115.45cc ஒற்றை சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.48 bhp பவரை வெளிப்படுத்துகின்றது. மேலும் 5 வேக கியர்பாக்ஸ் கொண்ட ஒரே 110cc மாடலாகும்.

சிடி110x மைலேஜ் 65-70kmpl வரை வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் விலை ₹ 67,425 ஆகும்.

Bajaj Platina CT110X
Engine Displacement (CC) 115.45 cc Fi, Single Cylinder
Power 8.48 bhp at 7000 rpm
Torque 9.81 Nm at 6000 rpm
Gear Box 5 Speed

2023 பஜாஜ் CT110X பைக்கின் ஆன்-ரோடு விலை ₹ 84,197

(All price on-road Tamil Nadu)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்-ரோடு விலையும் டீலர்களுக்கு டீலர் மற்றும் அடிப்படையான கூடுதல் ஆக்சரீஸ் பாகங்கள் சேர்க்கப்படும்பொழுது மாறுபடும்.

Exit mobile version