2018 ஹீரோ பேஸன் ப்ரோ, பேஸன் எக்ஸ் ப்ரோ விற்பனைக்கு வந்தது

உலகின் முதன்மையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியாவில் தொடக்கநிலை பைக் 100-110 சிசி சந்தையில் புதிய 2018 ஹீரோ பேஸன் ப்ரோ மற்றும் ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ ஆகிய இரு மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

2018 ஹீரோ பேஸன் ப்ரோ, பேஸன் எக்ஸ் ப்ரோ

இந்தியாவின் 100-110சிசி வரையிலான சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாட்டின் மொத்த விற்பனையில் 75 சதவீத பங்களிப்பை பெற்று விளங்குகின்ற நிலையில் ஹீரோ ஸ்பிளென்டர் மாடலுக்கு மாற்றாக ஹீரோ நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுகின்ற பேஸன் ப்ரோ மற்றும் பேஸ்ன் எக்ஸ் ப்ரோ ஆகிய மாடல்கள் முற்றிலும் மேம்படுத்தபட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

பேஸன் ப்ரோ பைக்

புதிய பேஸன் ப்ரோ பைக் பல்வேறு தோற்ற மாறுதல்களுடன் நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் பெற்றுள்ள நிலையில் புதிய பெட்ரோல் டேங்க், புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்கு, இருக்கை அடியில் வழங்கப்பட்டுள்ள ஸ்டோரேஜ் வசதி மற்றும் மொபைல் சார்ஜிங் போர்ட் உட்பட புதிய டிஜிட்டல் அடலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு டிஜிட்டல் எரிபொருள் கேஜ், ட்ரீப் மீட்டர் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டதாக புதிய 2018 ஹீரோ பேஷன் ப்ரோ பைக் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.

புதிய பேஸன் ப்ரோ பைக்கில் i3s நுட்பத்தை பெற்ற 110சிசி TOD (Torque on Demand) எஞ்சின் அதிகபட்சமாக 9.4 bhp பவருடன், 9 Nm டார்க்கினை வழங்கும்,இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பேஸன் ப்ரோ மிக சிறப்பான மைலேஜ் மற்றும் கையாளுமை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், முந்தைய மாடலை விட 12 சதவீத கூடுதல் பவர் மற்றும் டார்க் வழங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் குறிப்பிட்டுள்ளது.

டிரம் மற்றும் டிஸ்க் என இரண்டு பிரேக் தேர்வுகளிலும் கிடைக்க உள்ள ஹீரோ பேஸன் ப்ரோ பைக்கில் கருப்பு, சிவப்பு, நீலம், சில்வர் மற்றும் கிரே ஆகிய 5 நிறங்களில் கிடைக்க உள்ளது.

2018 ஹீரோ பேஸன் ப்ரோ விலை ரூ. 53,189 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

2018 ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ

ஏறக்குறைய பேஸன் ப்ரோ வசதிகளை பெற்றிருந்தாலும் எக்ஸ் ப்ரோ மாடல் கூர்மையான பெட்ரோல் டேங்க் ,நேர்த்தியான கவுல் பேனல், சைட் ஸ்டெப் இன்டிகேட்டர் ஆகிய அம்சங்களுடன் , புதிய டிஜிட்டல் அனலாக் மீட்டரை பெற்றதாக வந்துள்ளது.

புதிய பேஸன் ப்ரோ பைக்கில் இடம்பெற்று அதே எஞ்சினை பேஸன் எக்ஸ் ப்ரோ மாடலும் பெற்றுள்ளது. i3s நுட்பத்தை பெற்ற 110சிசி TOD (Torque on Demand) எஞ்சின் அதிகபட்சமாக 9.4 bhp பவருடன், 9 Nm டார்க்கினை வழங்கும்,இதில் 4 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பேஸன் எக்ஸ் ப்ரோ மிக சிறப்பான மைலேஜ் மற்றும் கையாளுமை வெளிப்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால், முந்தைய மாடலை விட 12 சதவீத கூடுதல் பவர் மற்றும் டார்க் வழங்கும் என ஹீரோ குறிப்பிட்டுள்ளது.

அலாய் வீல், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் ஆகியவற்றை பெற்றுள்ள பேஸன் எக்ஸ் ப்ரோ மாடலில் கருப்பு நிறத்துடன் கலந்த சிவப்பு, சிவப்பு நிறத்துடன் கலந்த கருப்பு, கருப்பு நிறத்துடன் நீலம், கருப்பு நிறத்துடன் கிரே, மற்றும் சில்வர் நிறத்துடன் கருப்பு என மொத்தம் 5 விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

2018 ஹீரோ பேஸன் எக்ஸ் ப்ரோ விலை ரூ. 54,189 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Exit mobile version