Categories: Bike News

2018 சுசூகி ஜிக்ஸர் SP, ஜிக்ஸர் SF SP விற்பனைக்கு வெளியானது

சுசூகி நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஜிக்ஸர் பைக் மாடலில் மீண்டும் எஸ்பி எடிசன் என்ற பெயரில் சிறப்பு எடிஷனை 2018 சுசூகி ஜிக்ஸர் SP மற்றும் ஜிக்ஸர் SF SP ஆகிய இரு மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

2018 சுசூகி ஜிக்ஸர் SP மற்றும் ஜிக்ஸர் SF SP

ஜிக்ஸெர் SP பேட்ஜ் பதிக்கப்பட்ட புதிய மாடல்களிலும் எஞ்சின் ஆப்ஷன் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை. நேக்டூ மற்றும் ஃபேரிங் செய்யப்பட்ட இரு மாடல்களிலும் சிறப்பான செயல்திறன் மற்றும் மைலேஜ் தரவல்ல 14.8hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இஞ்ஜின் ஆற்றலை கடத்துவதற்கு 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது.

முந்தைய ஆண்டின் ஸ்பெஷல் எடிசன் போலவே மிக சிறப்பான நிற கலவையை பெற்றதாக வந்துள்ள இரு மாடல்களிலும் மூன்று விதமான நிற கலவயை பெற்றதாக வந்திருப்பதுடன் ஜிக்ஸெர் பாடி ஸ்டிக்கரிங் அம்சத்தை முன் கவல் பேனல் மற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியவற்றில் பெற்றதாக கிடைக்கின்றது. சிறப்பு எடிசன் இரு மாடல்களிலும் மெஜெஸ்டிக் கோல்டு மற்றும் ஸ்பார்கிள் பிளாக் கலர் அடிப்படையாக வந்துள்ளது.

முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது. ஜிக்ஸெர் நேக்டு பைக்கின் முன்பக்க டயரில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்ரம் பிரேக் ஆப்ஷனலாக கிடைக்கின்றது.

ஏபிஎஸ் மற்றும் எஃப்ஐ ஆகியவற்றை பெற்ற ஃபேரிங் செய்யப்பட்ட ஜிக்ஸெர் எஸ்எஃப் மாடலில் கிடைக்கின்றது.2017 Suzuki Gixxer SF SP ABS

2018 சுஸூகி ஜிக்ஸர் SP சீரிஸ் விலை பட்டியல்

2018 சுஸூகி ஜிக்ஸர் SP – ரூ. 87,250

2018 சுஸூகி ஜிக்ஸர் SF SP – ரூ. 1,00,630

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

 

Recent Posts

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஃபேரிங் ஸ்டைல் மோட்டார் சைக்கிள் அப்பாச்சி RR 310R 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு…

2 days ago

சென்னையில் ஃபோர்டு கார்களை தயாரிக்க ஜேஎஸ்டபிள்யூ கூட்டணி..?

அமெரிக்காவின் பிரபலமான ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இதற்கான கூட்டணியை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் அமைக்க உள்ளதாக…

2 days ago

செப்டம்பர் 16ல் கியா கார்னிவல் முன்பதிவு துவங்குகின்றது

வரும் அக்டோபர் 3ஆம் தேதி கியா நிறுவனத்தின் கார்னிவல் மற்றும் EV 9 எலெக்ட்ரிக் எஸ்யூவி என இரண்டு மாடல்களும்…

2 days ago

மீண்டும் HF டான் பைக்கை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான 97.2cc என்ஜின் பொருத்தப்பட்டு வட்ட வடிவ ஹெட்லைட் பெற்ற HF டான் மாடலை சாலை சோதனை…

2 days ago

புதிய கார்பன் ஃபைபர் பேட்டர்னில் 2024 யமஹா R15M விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவின் பிரபலமான யமஹா R15M பைக்கில் R1 பைக்கில் இருந்து பெறப்பட்ட கார்பன் ஃபைபர் வகையிலான பேட்டர்னை வெளிப்படுத்தும் பாடி…

3 days ago

மீண்டும் ஃபோர்டு இந்திய வருகை உறுதியானது..!

சமீபத்தில் அமெரிக்கா பயணம் மேற்கோண்டிருந்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சந்திப்புக்கு பிறகு ஃபோர்டு இந்தியா தனது…

3 days ago