Dominar 400: இந்தியாவில் 2019 பஜாஜ் டோமினார் 400 பைக் விற்பனைக்கு வந்தது

2019 பஜாஜ் டோமினார் 400

முந்தைய மாடலை விட கூடுதல் பவர், மேம்பட்ட செயல்திறன் உட்பட பல்வேறு வசதிகளை பெற்ற புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை ரூபாய் 1.74 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பஜாஜ் டோமினாரின் அதிகார்வப்பூர்வ விலை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.11,000 வரை விலை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. புதியதாக பச்சை நிறத்தை பைக் பெற்றுள்ளது.

2019 பஜாஜ் டோமினார் 400 பைக்கின் சிறப்புகள்

முந்தைய மாடலை விட கூடுதல் பவர், சஸ்பென்ஷன் மாற்றங்கள் என பல்வேறு வகையில் முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்டதாக மாடர்ன் பவர் க்ரூஸர் டாமினார் 400 விளங்குகின்றது.

முன்பாக SOHC பெற்ற என்ஜினில் தற்போது  DOHC உடன் டோமினார் 400-ல் 373 சிசி என்ஜின் மூன்று ஸ்பார்க் பிளக்குகளுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டு பவர் 4.9 PS வரை அதிகரிக்கப்பட்டு , தற்போது 39.9 PS பவரினை 8650 ஆர்பிஎம் மூலம் வெளிப்படுத்துகின்றது. சிறப்பான வகையில் டார்க் சார்ந்த மேம்பாட்டை பெற்று 7000 ஆர்பிஎம்-ல் 35 Nm வழங்குகின்றது. டார்கில் மாற்றங்கள் இல்லை. அதே போல 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

முந்தைய மாடலை விட பைக்கின் சப்தம் புகைப்போக்கி மூலம் இரு பிரிவாக மாற்றயமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகரித்துள்ளது.

இந்த பைக்கில் இரண்டு கிளஸ்ட்டர்கள் பெற்றிருக்கின்றது. டோமினாரில் நவீன வசதியை பெற்ற டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், இரண்டாவது கிளஸ்ட்டராக வழங்கப்பட்டுள்ள இடத்தில் எரிபொருள் கலனில் இணைக்கப்பட்டுள்ள கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் டிரிப்மீட்டர், கடிகாரம் போன்றவை சேர்க்கப்பட்டிருக்கின்றது.

அடுத்ததாக இந்த பைக்கின் சஸ்பென்ஷன் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாஃ, முந்தைய மாடலை விட சிறப்பான சொகுசு தன்மை வழங்கும் வகையில் வந்துள்ளது. புதிய டோமினார் 400 பைக்கில் கேடிஎம் மாடலில் இடம்பெற்றுள்ளதை போன்ற 43mm முன்புற யூஎஸ்டி ஃபோர்க்கு சஸ்பென்ஷன் மற்றும் பின்புற மோனோ ஷாக் அப்சார்பர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கின்றது.

புதிய டோமினாரின் தோற்ற அமைப்பில் பெட்ரோல் டேங்க், பேன்ல்கள் உள்ளிட்டவற்றில் சிறிய அளவிலான மாற்றங்கள் மற்றும் ஸ்டைல் மிகுந்த பாடி கிராபிக்ஸ் அம்சத்தை பெற்றுள்ளது.

Exit mobile version