2019 ஹீரோ பிளெஷர் 110, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

hero Maestro-Edge-125

வரும் மே 13 ஆம் தேதி 2019 ஹீரோ பிளெஷர் 110 மற்றும் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வெளியிட உள்ளது. பிளெஷர் ஸ்கூட்டர் முற்றிலும் மேம்படுத்தப்பபட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

தற்போது 102சிசி என்ஜின் பொருத்தபட்டுள்ள பிளெஷரின் புதிய மாடல் 110சிசி என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் உள்ள என்ஜினை மேஸ்ட்ரோ எட்ஜ் 125 பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது.

ஹீரோ பிளெஷர் 110, மேஸ்ட்ரோ எட்ஜ் 125

முன்பே ஹீரோ நிறுவனத்தின் பிளெஷர் ஸ்கூட்டரின் விளம்பர பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட மாடலின் படம் வெளியாகியிருந்த நிலையில், விற்பனை செய்யப்படுகின்ற மாடலை விட புதிய மாடல் மிக அதிகப்படியான மாற்றங்களுடன் ஸ்டைலிஷான் புதிய ஹெட்லைட் தோற்றம், முன்புற அப்ரான் பக்கவாட்டில் உள்ள பேனல்கள் போன்றவை புதுப்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது 102 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மாடலில் இனி டூயட், மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களில் இடம்பெற்றுள்ள 110சிசி என்ஜின் கொண்டிருக்கும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 8.1hp மற்றும் 8.7Nm டார்க் வழங்கவல்லதாக விளங்கலாம்.

விற்பனையில் உள்ள டெஸ்டினி 125 ஸ்கூட்டரை விட கூடுதல் விலையில் வெளியாக உள்ள பிரிமியம் அம்சங்களை பெற்றதாக வரவுள்ள ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் முதன்முறையாக 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.

124சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக  8.7hp மற்றும் 10.2Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும். இந்த என்ஜின் கார்புரேட்டர் மற்றும் எஃப்ஐ என இரண்டிலும் வெளிவரக்கூடும். எஃப்ஐ என்ஜின் கூடுதல் பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோ பிளெஷர், மேஸ்ட்ரோ எட்ஜ் 125 என இரு மாடல்களின் விலை உறுதிப்படுத்தப்பட்ட மேலதிக விபரங்களில் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Exit mobile version