• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2019 சுசுகி ஜிக்ஸர் SF 150 ஸ்பை படங்கள் மற்றும் விபரம் வெளியானது

by MR.Durai
19 May 2019, 8:32 am
in Bike News
0
ShareTweetSend

2019-suzuki-gixxer-sf-150-images

மே 20ந் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ள சுசுகி ஜிக்ஸர் SF  வரிசையில் 250 மற்றும் மேம்படுத்தப்பட்ட 2019 ஜிக்ஸர் SF 150 பைக் மாடலும் விற்பனைக்கு வெளியாக உள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு மேம்பாடுகளை புதிய 150 பைக் பெற்றதாக அமைந்துள்ளது.

மிகவும் மிரட்டலான தோற்ற அமைப்பினை வெளிப்படுத்தும் புதிய ஜிக்ஸர் 150 மாடல் புதிதாக களமிறங்க உள்ள எஸ்எஃப் 250 பைக்கின் உந்துதலை பின்னணியாக கொண்டிருக்கின்றது.

2019 சுசுகி ஜிக்ஸர் SF 150 எதிர்பார்ப்புகள்

முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற 150 மாடலின் என்ஜின் பவர் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இருக்க வாய்ப்பில்லை. 14.8 hp ஆற்றலை வெளிப்படுத்தகூடிய 155சிசி என்ஜினை பெற்றுள்ள ஜிக்ஸெர் வரிசை பைக் என்ஜினில் கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன்பெற்றதாக சுஸூகி ஈக்கோ பெர்ஃபாமென்ஸ் நுட்பத்தினை பெற்றுள்ளதால் சிறப்பான மைலேஜ் தருகின்றது. இதன் இழுவைதிறன் 14.02 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட ஃபேரிங் செய்யப்பட்ட பேனல்கள் மிக நேர்த்தியான முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கைகள், கிளிப் ஆன் ஹேண்டில் பார், க்ரோம் பூச்சை பெற்ற சைலென்ஸர் பேரல் மற்றும் புதிய பாடி கிராபிக்ஸ் போன்றவை பெற்றுள்ளது.

மற்றபடி மெக்கானிக்கல் மாற்றங்கள் பெரிதாக காணப்படாமல், சில மேம்பாடுகளை மட்டும் வழங்கியிருக்கின்றது. முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரினை பெற்றுள்ளது.

தொடர்ந்து சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் கொண்டதாக ஜிக்ஸர் SF 150 பைக் விற்பனைக்கு வெளியிட உள்ளது. நாளை விற்பனைக்கு வெளியாக உள்ள ஜிக்ஸர் எஸ்எஃப் 250 மற்றும் 150 பைக் பற்றி முழுமையாக நாளை அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து பைக் செய்திகளை வாசிக்க மற்றும் யூடியூப் சேனலை பாருங்க, ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் இணைந்திருங்கள்

image source – motoroids.com

Tags: Suzuki GixxerSuzuki Motorcycle
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

ரூ. 1.79 லட்சம் விலையில் கேடிஎம் 160 டியூக்கில் TFT கிளஸ்ட்டர் வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version