Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
2021 பஜாஜ் பல்சர் 180 பைக் விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

2021 பஜாஜ் பல்சர் 180 பைக் விற்பனைக்கு வெளியானது

2a782 2021 bajaj pulsar 180

செமி ஃபேரிங் செய்யப்பட்ட பல்சர் 180F நீக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பஜாஜ் பல்சர் 180 விற்பனைக்கு ரூ.1.08 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்சர் 125, பல்சர் 150 ஆகியவற்றை பின்பற்றிய டிசைனில் மட்டுமே அமைந்துள்ளது.

செமி ஃபேரிங் செய்யப்பட்ட பாகங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளது. மற்றபடி டிசைன் அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை. பல்சர் 180 பைக்கில் Fi பெற்று 17 PS பவர் வெளிப்படுத்துகின்ற 178 சிசி என்ஜின் டார்க்  14.2 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

பஜாஜின் பல்சர் 180 மாடலில் முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.

பஜாஜ் பல்சர் 180 விலை ரூ.1.08 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தமிழகம்)

Exit mobile version