Automobile Tamilan

பிஎஸ்-6 பிஎம்டபிள்யூ G 310 R , G 310 GS பைக்கின் எதிர்பார்ப்புகள்

a3796 2021 bmw g 310 gs rallye

அக்டோபர் 8 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற இன்ஜின் பெற உள்ள பிஎம்டபிள்யூ G 310 R மற்றும் பிஎம்டபிள்யூ G 310 GS என இரண்டு மாடல்களும் பல்வேறு ஸ்டைலிங் மேம்பாடுகளை கொண்டதாக வரவுள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக அட்வென்ச்சர் ரக பிஎம்டபிள்யூ G 310 GS பைக்கில் இடம்பெற உள்ள வசதிகள் மற்றும் டிசைன் மேம்பாடுகள் என அனைத்து தகவலும் வெளியாகியுள்ள நிலையில் அதனை தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

புதிய ஜி 310 ஜிஎஸ் பைக்கில் ரைட் பை வயர் திராட்டிள், கிளட்ச் மற்றும் பிரேக் அட்ஜெஸ்டபிள் வசதி, சிலிப்பர் கிளட்ச் அசிஸ்ட் மற்றும் முழுமையான எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. மற்றபடி ஸ்டைலிங் அம்சங்களில் சிறிய அளவில் மாற்றங்கள் கொடுக்கப்பட்டு புதிய நிறங்கள் மற்றும் சிறப்பு 40 இயர்ஸ் எடிசன் ஆகியவை இடம்பெற உள்ளது.

புதிய ஜி 310 ஆர் பைக்கின் நுட்ப விபரங்கள் மற்றும் டிசைன மாற்றங்கள் நாளை வெளியாக உள்ளது. மற்றபடி புதிய வசதிகளை ஒரே மாதிரியாக இரண்டு மாடல்களும் பெறலாம்.

அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் இந்த இரு பைக்குகளும் ஒரே இன்ஜினை பகிர்ந்து கொள்ளுகின்றன. 312.2 சிசி என்ஜின் 34 ஹெச்பி பவரை 9,700 ஆர்.பி.எம் மூலமாகவும் மற்றும் 7,700 ஆர்.பி.எம்-ல் 27.3 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் இணைந்துள்ளது.

பிஎஸ் 6 அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கில் இடம்பெற்றுள்ள க்ளைடு த்ரூ டெக்னாலஜி பிளஸ் (GTTP- Glide Through Traffic) பிஎம்டபிள்யூ பைக்குகளிலும் இடம்பெறலாம். இது நகர்ப்புறத்தில் ஓட்டும்போது ஆறாவது கியரிலும் பயணிக்கும் வகையில் இயங்குகிறது. திராட்டிலை கொடுக்காமலே பைக்கினை இயக்க இயலும். பொதுவாக இந்த அம்சம் தானியங்கி கார்களில் இடம்பெறுவது வழக்கமாகும்.

உள்நாட்டிலே பெரும்பாலான உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படுவதனால், பிஎஸ்-4 மாடலை விட குறைவாக விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

web title – 2021 BMW G 310 R And G 310 GS bs6 Launch Tomorrow – tamil bike news

Exit mobile version