Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது | Automobile Tamilan

2021 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு வெளியானது

355a3 bs6 kawasaki ninja 300 black

ரூ.3.18 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி நின்ஜா 300 பைக்கில் பிஎஸ்-6 ஆதரவு பெற்ற இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.20,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டிசைன் அம்சங்கள் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. புதிய பாடி கிராபிக்ஸ் நிறங்களை பெற்றுள்ள நின்ஜா 300 மாடலில்  296 cc பேரலல் ட்வீன் இன்ஜின் லிக்யூடு கூல்டு நுட்பத்தை பெற்று அதிகபட்சமாக 38.4 bhp மற்றும் 27 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரை பெற்றுள்ள இந்த பைக்கில் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டிருக்கும்.

ஸ்போர்ட்டிவான டிசைன் கொண்ட நின்ஜாவில் லைம் பச்சை, கேன்டி லைம் பச்சை மற்றும் இபோனி ஆகிய நிறங்களை கொண்டுள்ளது.

Exit mobile version