Automobile Tamilan

2021 யமஹா MT-07 பைக் அறிமுகமானது

4b4e9 2021 yamaha mt 07

சமீபத்தில் வெளியான யமஹா எம்டி-09 பைக்கின் தோற்ற உந்துதலில் 2021 யமஹா MT-07 மாடலை யூரோ 5 மாசு உமிழ்வுக்கு ஏற்ற வகையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட யமஹா எம்டி-07 மாடலில் யூரோ -5 உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட 680cc பேரலல் ட்வீன் இன்ஜின் பெற்று புதிய எக்ஸ்ஹாஸ்ட் வடிவமைப்பு மற்றும் புதிய இசியூ பெற்று  73.4 ஹெச்பி பவரை 8750rpm-ல் மற்றும் 6,500rpm-ல் 67 என்.எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடலை விட பவர் (74.8hp) மற்றும் டார்க் (68Nm) கனிசமாக குறைந்துள்ளது.

புதிய எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், டெயில் லைட் மற்றும் டர்ன் இன்டிகேட்டர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் ஹேண்டில் பார் 15 மிமீ வரை நீட்டிக்கப்பட்டு, புதிய எல்சிடி கிளஸ்ட்டர், மற்றபடி மிக நேர்த்தியாக டிசைன் செய்யப்பட்ட பேனல்கள் மற்றும் சிறப்பான பாடி கிராபிக்ஸ் இணைந்துள்ளது.

முந்தைய மாடலை விட 2 கிலோ வரை எடை அதிகரிக்கப்பட்டு இப்போது 184 கிலோ எடையுடன் விளங்குகின்ற யமஹா எம்டி-07 மாடல் டைமண்ட் ஃபிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் 298 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த டிஸ்க் 282 மிமீ ஆக இருந்தது.

சர்வதேச அளவில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள யமஹா MT-09 பைக்கினை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை.

web title : 2021 Yamaha MT-07 Debut

Exit mobile version