2023 பஜாஜ் பல்சர் NS160 பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS160 பைக்கில் பல்வேறு மேம்பாடுகள் வழங்கப்பட்டு விலை ரூபாய் 10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் முன்புற சஸ்பென்ஷன் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள அப் சைடு டவுன் ஃபோர்க் சேர்க்கப்பட்டுள்ளது.

என்ஜின் சார்ந்த பவர் மற்றும் டார்க் தொடர்பானவற்றில் எந்த மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. புதிய OBD-2 (onboard diagnostics) அப்டேட் மட்டுமே பெற்று பல்சர் 250 பைக்கில் இருந்து சில அம்சங்களை பெற்றதாக அமைந்துள்ளது. பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் டோமினார் என்ற பெயரில் இந்த பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது.

Bajaj Pulsar NS160

தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் கொடுக்கப்படாமல் சில வசதிகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. முன்பாக டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனுக்கு மாற்றாக அப் சைடு டவுன் ஃபோர்க் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2023 பல்சர் என்எஸ் 160 பைக் மாடலில், ஹாலெஜென் ஹெட்லைட் உடன் எல்இடி டெயில் லைட் மற்றும் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர் மற்றும் ஃப்யூல் லெவல் இண்டிகேட்டர் ஆகியவற்றை மட்டும் வெளிப்படுத்தி வந்த செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் கூடுதலாக இப்போது கியர் பொசிஷன் இண்டிகேட்டர் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

பல்சர் NS160 பைக்கில் 160.3cc ஒற்றை சிலிண்டர் ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 17.03 bhp பவர் மற்றும் டார்க் 14.6 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய அலாய் வீல் பல்சர் 250 பைக்கில் இருந்து பெறப்பட்டு முன்புறத்தில் 100/80-17 டயர் மற்றும் பின்புறத்தில் 130/70-17 டயர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பைக்கின் எடை 1 கிலோ வரை அதிகரித்து இப்பொழுது 152 கிலோ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2023 பல்சர் NS160 பைக்கின் விலை ரூ. 1,34,657 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) .. முந்தைய மாடலை விட விலை ரூ. 9,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Specs2023 Pulsar NS160
என்ஜின்160.3 cc
அதிகபட்ச பவர்12.7 kW (17.2 PS) @ 9000 rpm
அதிகபட்ச டார்க்14.6 Nm @ 7250 rpm
கியர்பாக்ஸ் 5 வேக மேனுவல் (1 Down 4 Up)
முன்புற பிரேக்300 mm
பின்புற பிரேக்230 mm
Kerb Weight152 கிலோ
Pulsar NS160 Specifications
Exit mobile version