Automobile Tamilan

புதிய நிறத்தில் 2023 பஜாஜ் பல்சர் NS200 மற்றும் NS160 வருகை

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS பைக் வரிசையில் இடம்பெற்றுள்ள NS200 மற்றும் NS160 என இரண்டிலும் சிவப்பு நிறத்தை கொண்டு வந்துள்ளது. விலை அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் பல்சர் 220F மற்றும் அவென்ஜர் 220 ஸ்டீரிட் என இரு மாடல்களும் மீண்டும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய நிறங்களை மட்டுமே பெற உள்ள என்எஸ் 200 மற்றும் என்எஸ் 160 வேறு எந்த மாற்றங்களையும் கொண்டிருக்காது.

2023 Bajaj Pulsar NS200 and NS160

NS160 பைக்கில் 17.03 bhp பவர் மற்றும் டார்க் 14.6 Nm வெளிப்படுத்தும் 160.3cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக., NS200 பைக்கில் 24.13 bhp பவர் மற்றும் டார்க் 18.74 Nm வெளிப்படுத்தும் 199.5cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

2023 Pulsar NS160 – ₹ 1,36,824

2023 Pulsar NS200 ₹ 1,49,875

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

முன்பாக பயன்படுத்தப்பட்டு வந்த டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் நீக்கப்பட்டு சிறப்பான சஸ்பென்ஷனை வழங்கும் வகையில் யூஎஸ்டி சஸ்பென்ஷனாக மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி என்ஜின் உட்பட டிசைன் அம்சங்களில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.

2023 பஜாஜ் பல்சர் NS200 பைக்கின் சென்னை ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

2023 பஜாஜ் பல்சர் NS200 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 1,75,675 ஆகும்.

2023 பஜாஜ் பல்சர் NS160 பைக்கின் சென்னை ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

2023 பஜாஜ் பல்சர் NS160 பைக்கின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ₹ 1,54,675 ஆகும்.

 

Exit mobile version