Automobile Tamilan

₹2.40 லட்சத்தில் 2023 ஹோண்டா CB300R விற்பனைக்கு அறிமுகமானது

honda cb300r bike

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிதாக BS6 இரண்டாம் கட்ட OBD-2 மேம்பாடு பெற்ற CB300R பைக்கின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் விலை ரூ.2,40,822 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்படுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.37,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு மற்றும் கிரே என இரு நிறங்களை பெற்றதாக வந்துள்ள சிபி300ஆர் முந்தைய மாடலை போலவே அமைந்துள்ள நிலையில் எந்த மாற்றங்களும் இல்லை.

Honda CB300R

146 கிலோ எடை கொண்ட ஹோண்டா சிபி300 ஆர் பைக்கில்  286cc, ஆயில்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், PGM-Fi என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 31 hp பவர் மற்றும் 27.5Nm டார்க் வழங்குகின்றது. இந்த என்ஜினில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லிப்பர் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பு மற்றும் என்ஜின் உட்பட என அனைத்திலுமும் எந்த மாற்றங்களும் இல்லை. டைமண்ட் வகை சேஸ் பெற்றுள்ள CB300R மாடலில் 17-இன்ச் அலாய் வீல் பெற்று 41மிமீ USD ஃபோர்க்குகள் மற்றும்  மோனோஷாக் சஸ்பெனெஷன் பெற்றுள்ளது. இரு பக்கங்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் வருகின்றது.

நியோ ஸ்போர்ட்ஸ் கஃபே ஸ்டைலை பெற்றுள்ள ஹோண்டா சிபி 300 ஆர் பைக்கிற்கு போட்டியாக பல்வேறு சக்திவாய்ந்த மாடல்களான டிரையம்ப் ஸ்பீடு 400, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Exit mobile version