Automobile Tamilan

2023 கோமகி ரேஞ்சர் எலக்ட்ரிக் க்ரூஸர் பைக் அறிமுகம்

2023 komaki ranger electric bike

₹ 1,85,505 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேம்பட்ட 2023 கோமகி ரேஞ்சர் எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கின் ரேஞ்சு 200 கிமீ முதல் 250 கிமீ வரை கிடைக்கும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற ஒரு சில எலக்ட்ரிக் பைக் மாடல்களில் ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக் மாடலும் ஒன்றாகும். இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் க்ரூஸர் என்ற பெருமையை கொண்டுள்ளது.

2023 Komaki Ranger

புதிய கோமாகி ரேஞ்சர் பைக்கில் பல்வேறு மேம்பட்ட அம்சங்களை பெற்றுள்ள நிலையில் 7.0 அங்குல TFT திரை கொடுக்கப்பட்டு நேவிகேஷன் வசதி மற்றும் ICE என்ஜின் போல ஒலி எழுப்ப இரண்டு புகைப்போக்கி போன்ற ஸ்பீக்கர் அமைப்பு, க்ரூஸ் கண்ட்ரோல், பார்க்கிங் அசிஸ்ட் , ரிவர்ஸ் மோட், ஆட்டோ ரிப்பேர் சுவிட்ச், 50 லிட்டர் கொள்ளளவு பெற்ற பேனியர் பேக்குகள்,  போன்றவற்றை கொண்டுள்ளது.

ரேஞ்சர் எலக்ட்ரிக் பைக்கில் 5000 வாட்ஸ் BLDC  மோட்டார் பொருத்தப்பட்டு 4.5 kWh க்ரூஸர் பைக்கினை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 – 250 கி.மீ வரை ரேஞ்சு வழங்கும்.முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

கோமாகி எலக்ட்ரிக் பிரிவின் இயக்குநர் குஞ்சன் மல்ஹோத்ரா கூறுகையில் “ரேஞ்சர் பிரீமியம்  மேம்பட்ட EV மாடலை மேம்படுத்தும் போது எங்களின் முதன்மையான கவனம் இருந்தது. இருப்பினும், இந்திய சந்தையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் ஏற்ற வாகனமாக கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்,”

இந்ந க்ரூஸர் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கும் என்று கோமகி உறுதிப்படுத்தியுள்ளது.

2023 கோமகி ரேஞ்சர் எலக்ட்ரிக் க்ரூஸர் விலை ₹ 1,85,505 (எக்ஸ்ஷோரூம்)

Exit mobile version