Automobile Tamilan

2023 யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் விற்பனைக்கு வெளியானது

யமஹா நிறுவனம் தனது ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை சேர்த்து கூடுலாக சில்வர் நிறத்துடன் OBD2 மற்றும் E20 மேம்பாடு கொண்ட என்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக இந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களில்வ TCS எனப்படுகின்ற நிலை தடுமாறுவதனை தடுக்கும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் அமைப்பினை இணைத்துள்ளது.

150சிசி சந்தையில் மிக பிரீமியம் வசதிகளை பெற்ற ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் ஆர்15 பைக்கில் இடம்பெற்றிருக்கின்ற அதே என்ஜினை சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக பகிர்ந்து கொள்ளுகின்றது.

2023 Yamaha Aerox 155

ஏரோக்ஸ் ஸ்கூட்டரின் தோற்ற அமைப்பில் பெரிதாக எத மாற்றமும் இல்லாமல், ஸ்போர்ட்டிவான வடிவமைப்பை கொண்டுள்ள அப்ரனில் பொருத்தப்பட்ட  ஸ்பிலிட் ஹெட்லைட் மற்றும் ஹேண்டில்பாரில் சிறிய வைசரைக் கொண்டுள்ளது. மேலும், ஒற்றை- இருக்கை மற்றும் வளைவுகள், பேனல்கள் என அனைத்தும் முன்பு போலவே இருக்கும். புதுப்பிக்கப்பட்ட மாடலுக்கான மாற்றங்களில் முக்கியமாக புதிய மெட்டாலிக் சில்வர் நிறம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நிறங்களாக மெட்டாலிக் பிளாக், ரேசிங் ப்ளூ மற்றும் கிரே வெர்மிலியன் கிடைக்கின்றது.

2023 ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ள OBD2 விதிமுறைகளை காரணமாக இப்போது நிகழ்நேர வாகன மாசு உமிழ்வை கண்காணிக்க முடியும். VVA வசதியை கொண்ட 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 13.9Nm டார்க் வழங்க 6,500rpm மற்றும் 15bhp பவர் வெளிப்படுத்த 8000rpm-ல் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் CVT கியர்பாக்ஸுடன் வருகின்றது.

சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை, டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று பிரேக்கிங் முறையில் 230 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 110/80-14 முன்புற டயர் மற்றும் 140/70-14 பின்புற டயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் இது வீல் ஸ்பின் ஆகுவதனை குறைத்து ரைடரின் பாதுகாப்பை மேம்படுத்த Traction control system கொண்டதாக வந்துள்ளது. எல்இடி விளக்கு, ஸ்மார்ட்போன் இணைப்பை ஏற்படுத்துகின்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சைட்-ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் சுவிட்ச், ஆட்டோமேட்டிக் ஸ்டார்ட்-ஸ்டாப், ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் போன்றவற்றை கொண்டுள்ளது.

புதிய 2023 யமஹா ஏரோக்ஸ் ஸ்கூட்டர் விலை ₹ 1,43,539 (எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு)

2023 யமஹா Aerox 155 ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை எவ்வளவு ?

புதிய TCS அமைப்பினை பெற்ற 2023 யமஹா Aerox 155 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,68,522

யமஹா Aerox 155 என்ஜின் விபரம் ?

லிக்யூடு கூல்டு 155cc என்ஜின் பொருத்தப்பட்டு 15bhp பவர் 8000rpm-ல் மற்றும் 13.9Nm டார்க் வழங்க 6,500rpm-ல் வெளிப்படுத்துகிறது. CVT கியர்பாக்ஸ் உள்ளது

2023 Yamaha Aerox 155 மைலேஜ் எவ்வளவு ?

யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் மைலேஜ் லிட்டருக்கு 38 கிமீ - 40 கிமீ வரை கிடைக்கும்.

Exit mobile version