• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2024 பஜாஜ் பல்சர் N250 விற்பனைக்கு வெளியானது

by நிவின் கார்த்தி
10 April 2024, 2:01 pm
in Bike News
0
ShareTweetSend

2024 பஜாஜ் பல்சர் N250

பஜாஜ் ஆட்டோவின் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உடன் பல்சர் N250 பைக்கில் கூடுதலான சஸ்பென்ஷன் மாற்றங்களுடன் விற்பனைக்கு ரூ.1,50,839 (எக்ஸ்ஷோரூம்) ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏபிஎஸ் மோடு, டிராக்‌ஷன் கண்ட்ரோல், மற்றும் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

2024 பஜாஜ் பல்சர் என்250

புதுப்பிக்கப்பட்ட பல்சர் என்250 பைக்கில் முந்தைய டெலிஸ்கோபிக் ஃபோர்க்கிற்கு மாற்றாக 37 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் பெற்றுள்ளது. கோல்டன் நிறத்திலான ஃபோர்க் ஆனது வெள்ளை மற்றும் சிவப்பு என இரண்டிலும் உள்ளது. கருப்பு நிறத்தை பெற்ற மாடலில் பல்வேறு இடங்களில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

14 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்ட பல்சர் என்250 பைக்கில் 1342 மிமீ வீல்பேஸ் உடன் முன்புறத்தில் 300 மிமீ டிஸ்க் பிரேக், பின்புறத்தில் 230 டிஸ்க் கொண்டுள்ளது. Rain, Road, மற்றும் off-road என மூன்று விதமான ஏபிஎஸ் மோடுகளை பெற்றுள்ளது. டிராக்‌ஷன் கண்ட்ரோலும் இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் 110/70-17 மற்றும் 140/70-17 பின்புறத்தில் டயர் பெற்றதாக அமைந்துள்ளது.

ஜிட்டல் கன்சோல் மூலம் ஸ்மார்ட்போனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது ஸ்மார்ட்போனின் பல்வேறு வசதிகள் அனுகுவதுடன் கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ், ரைடிங்கை பொறுத்து தற்பொழுது மைலேஜ் எவ்வளவு கிடைக்கும் உள்ளிட்ட விவரங்களுடன் எவ்வளவு தொலைவு செல்ல பெட்ரோல் இருப்பு ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

பஜாஜ் பல்சர் என்250 மாடலில் 249.07cc, SOHC ஆயில் கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 24.5hp மற்றும் 21.5Nm டார்க்கை உருவாக்குகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

Tags: bajaj autoBajaj PulsarBajaj Pulsar 250பஜாஜ் பல்சர் N250
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

புதிய ஹீரோ டெஸ்டினி 125யின் 3,000 கிமீ பயண அனுபவத்தில் மைலேஜ் மற்றும் முதல் சர்வீஸ் கட்டண விபரம்!

ஏத்தரின் கோனார்க் ஸ்கூட்டரை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்.?

பஜாஜ் பல்சர் N160 S மற்றும் N160 SS அதிநவீன அம்சங்களுடன் அறிமுகம்!

இந்தியாவில் அறிமுகமானது யமஹா ஏராக்ஸ் E எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: விலை மற்றும் முழு விவரங்கள்!

டிவிஎஸ் ஐக்யூப் S 4.7kWh அறிமுகம்., ஒரே சார்ஜில் 175 கிமீ பயணம்!

350cc என்ஜினுடன் 390 டியூக் மற்றும் 390 அட்வென்ச்சரை வெளியிட்ட கேடிஎம்

ஃபிளையிங் ஃபிளேவின் முதல் எலக்ட்ரிக் C6 மோட்டார்சைக்கிளின் சிறப்பம்சங்கள்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ஜனவரி 1 முதல் ஏதெர் எனர்ஜி ஸ்கூட்டர்களின் ஸ்கூட்டர் விலை உயர்வு

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version