Automobile Tamilan

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை பட்டியல்

2024 Hero Xtreme 160R 4V Onroad price

இந்தியாவின் 160சிசி பைக் செக்மெண்டில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்போர்டிவாக பிரிவாக உள்ள சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கின் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் ஆனது சில மாறுபாடுகளுடன் கூடுதலான சில வசதிகளையும் பெற்று போட்டியாளர்களுக்கு ஒரு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த சந்தையில் கிடைக்கின்ற பல்சர் NS160 , டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V என இரு மாடல்களை நேரடியாக எதிர்கொள்கின்ற நிலையில் மற்ற மாடல்களான யமஹா நிறுவனத்தின் MT-15, சுசூகி ஜிக்ஸர், ஆகியவற்றுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.

2024 Hero Xtreme 160R 4V

குறிப்பாக அடிப்படையான எக்ஸ்ட்ரீம் 160R 4V டிசைனில் மாற்றங்கள் இல்லை என்றாலும் ஸ்பிளிட் சீட்டிற்கு பதிலாக இந்த முறை ஒற்றை இருக்கை அமைப்பானது கொடுக்கப்பட்டு மிகவும் கம்ஃபோர்ட்டான இருக்கை சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலின் ஸ்பிளிட் சீட் ஆனது பின்புறத்தில் அமருபவர்களுக்கு கடும் சிரமத்தினை ஏற்படுத்தியதை கருத்தில் கொண்டு தற்போது இந்நிறுவனம் ஒற்றை இருக்கை முறைக்கு தனது பைக்கினை மாற்றி அமைத்துள்ளது. இது ஒரு நல்ல வரவேற்க்க கூடிய ஒரு அம்சமாக பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து இந்த பைக்கில் 163.2cc ஏர்-ஆயில் கூல்டூ என்ஜின் அதிகபட்சமாக 8500rpm-ல் 16.9 hp பவர் மற்றும் 6500rpm-ல் 14.5 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது.

முன்பாக இந்த மாடலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைத்து வந்த நிலையில் தற்பொழுது 2024 ஆம் ஆண்டிற்கான மாடலில் ஒற்றை வேரியண்ட் என்று மட்டுமே நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் முந்தைய மாடலை விட ரூபாய் 2000 வரை விலை கூடுதலாக அமைந்திருப்பதற்கு சில வசதிகள் குறிப்பாக டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய பேனிங் பிரேக் அலர்ட், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கிளஸ்டர், டிராக் டைமர் கொண்டுள்ளது.  ப்ளூடூத் இணைப்புடன் ஹீரோவின் டெலிமாடிக்ஸ் அம்சத்தை ஹீரோ கனெக்ட் 2.0 என்ற பெயரில் பெற்றுள்ளது

இந்த கிளஸ்ட்டரில் 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் தொலைவை கணக்கிடும் D1 மோடு மற்றும் குவாட்டர் மைல்ஸ் எனப்படுகின்ற 0-402 மீட்டரை எட்டும் தொலைவிற்கான டிராக் மோடு D2 ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. மிகவும் கம்ஃபோர்ட்டான இருக்கை, புதுப்பிக்கப்பட்ட புதிய எல்இடி டெயில் லைட் மற்றும் கூடுதலாக கெவ்லர் பிரவுன், மேட் ஸ்லேட் பிளாக், நியான் ஷூட்டிங் ஸ்டார் என மூன்று நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் 276 மிமீ டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 220 மிமீ டிஸ்க் உள்ளது.  ட்யூபெலெஸ் டயர் இடம்பெற்று முன்பக்கத்தில் 100/80-17 மற்றும் 130/80-17 பின்பக்கத்தில் உள்ளது.

கோல்டு நிறத்திலான 37 mm KYB அப்சைடு டவுன் ஃபோர்க்,  பின்பக்கத்தில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது.

2024 Hero Xtreme 160R 4V Onroad price

2024 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V பைக்கின் விலை ரூ.1,38,500 (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி ஆன்ரோடு விலை ரூபாய் 1.72 லட்சம் ஆக உள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலையில் எவ்விதமான கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை.

Exit mobile version