Automobile Tamilan

புதிய நிறத்தில் 2024 நின்ஜா 300 பைக்கினை வெளியிட்ட கவாஸாகி

2024 kawsaki ninja 300

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஸ்போர்ட்டிவ் ஃபேரிங் ரக கவாஸாகி MY24 நின்ஜா 300 பைக்கின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வந்துள்ளது. தற்பொழுது நின்ஜாவின் 300 மாடலில் கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே என இரு நிறங்கள் பெற்றுள்ளது.

296சிசி லிக்யூடு கூல்டு பேரலல் ட்வீன் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்ற பைக்கின் பவர்  38.88bhp மற்றும் டார்க் 26.1Nm வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்று சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

179 கிலோ எடையைக் கொண்டுள்ள நின்ஜா 300ல் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பெனஷனை பெற்று ட்யூப்லெர் டைமண்ட் ஃபிரேம் பெற்றுள்ள மாடலில் 17 அங்குல சக்கரங்களை பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் உள்ளது.

இந்நிறுவனத்தின் குறைந்த விலை பேரலல் ட்வீன் சிலிண்டர் கொண்டுள்ள 2024 கவாஸாகி நின்ஜா 300 விலை ரூ.3.43 லட்சத்தில் (ex-showroom) கிடைக்கின்றது.

Exit mobile version