Automobile Tamilan

ரெட்ரோ ஸ்போர்ட்டிவ் 2024 கவாஸாகி Z650RS விற்பனைக்கு அறிமுகமானது

கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தையில் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய Z650RS பைக்கின் விலை ரூ.6.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 67bhp பவரை வழங்கும் 649சிசி பேரலல் ட்வீன் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

2024-kawasaki-z650rs

கவாஸாகி Z650RS பைக்கில் இடம்பெற்றுள்ள 649cc பேரலல்-ட்வின் எஞ்சின் 67bhp அதிகபட்ச பவர் 64Nm உச்ச டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் கொண்டுள்ளது. ரைடருக்கு கூடுதல் பாதுகாப்பினை வழங்க 2-மோட் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இணைத்துள்ளது.

இரு பக்கத்திலும் 17 அங்குல வீல் இடம்பெற்றுள்ள Z650RS  மாடலின் சஸ்பென்ஷன்  முன்பக்கத்தில் 41mm டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ-ஷாக் அப்சார்பர் இடம்பெற்றுள்ளது. முன்பக்க பிரேக் டூயல் டிஸ்க் மற்றும் பின்பக்கம் சிங்கிள் டிஸ்க்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

மெட்டாலிக் மேட் கார்பன் கிரே என்ற ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கின்ற இசட்650ஆர்எஸ் பைக்கில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், ஒற்றை துண்டு இருக்கை, டிஜிட்டல் அனலாக் கிளஸ்ட்டர் மற்றும் செமி ஸ்போக் அலாய் வீல் பெற்றுள்ளது.

Exit mobile version