Automobile Tamilan

2024 கேடிஎம் 250 டியூக் பைக்கின் விலை மற்றும் சிறப்புகள்

2024 ktm 250 duke

கேடிஎம் நிறுவனத்தின் புதிய 250 டியூக் பைக் பல்வேறு மேம்பாடுகளை 390 டியூக்கில் இருந்து பெற்றதாக அமைந்து விற்பனைக்கு ரூ.2.39 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான ஸ்டீரிட் ஃபைட்டர் மாடலாக 250 டியூக் விளங்குகின்றது.

இன்று முதல் KTM இணையதளம் அல்லது நாடு முழுவதும் உள்ள கேடிஎம் ஷோரூம் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டு, கட்டணமாக ரூ.4,499 வசூலிக்கப்படுகின்றது. விரைவில் டெலிவரி துவங்கப்பட உள்ளது.

2024 KTM 250 Duke

கேடிஎம் 390 டியூக் பைக்கை தொடர்ந்து 250 டியூக் மாடலில் பெட்ரோல் டேங்க் நீட்டிப்புகள் முன் ஃபோர்க்குகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன, முன்புறத்தில் ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேம்ப் பெற்று முரட்டுத்தனமான தோற்றத்தை கொண்டுள்ளது.. புதிய பைக்கில் செராமிக் வெள்ளை மற்றும் எலக்ட்ரானிக் ஆரஞ்சு என இரு நிறங்களை கொண்டுள்ளது.

கேடிஎம் 250 டியூக் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 249சிசி என்ஜின் 9250rpm-ல் அதிகபட்சமாக 31PS பவர் மற்றும் 7250rpm-ல் 25Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு சிலிப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. சிறந்த முறையில் காற்றினை பெற பெரிய ஏர்பாக்ஸ் உள்ளது.

புதிய ஸ்டீல் ஃபிரேம் சேஸ் பெற்றுள்ள 250 டியூக் பைக்கில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் கொண்ட ஸ்மார்ட்ஃபோன் இணைப்புடன் 5 அங்குல LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ரைட் பை வயர் திராட்டிள், க்விக் ஷிவிஃப்டர் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்துள்ளது.

163 கிலோ கெர்ப் எடை பெற்றுள்ள பைக்கின் முன்புறத்தில் USD முன் போர்க் மற்றும் பின்புறத்தில் ப்ரீ-லோட் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் கொண்டதாகவும், 176மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது. இரு பக்க டய்களிலும் டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.

2024 KTM DUKE Price list

(All price ex-showroom)

Exit mobile version