Automobile Tamilan

2024 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் விற்பனைக்கு வந்தது

2024 Royal enfield classic 350 jodhpur blue

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய கிளாசிக் 350 பைக் மாடல் விலை ரூபாய் 1,99,500 முதல் ரூபாய் 2,30,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் இருந்து புதிய நிறங்கள் மட்டுமல்லாமல் எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி பைலட் விளக்கு, கிளஸ்டரில் கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் டைப்-சி யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை பெற்றுள்ளது.

J-series என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்/ஆயில் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 6,100Rpm-ல் 20.2 bhp, 4,000Rpm-ல் 27 NM டார்க் வெளிப்படுத்தும் நிலையில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்று பின்புறத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது. மற்றபடி, இந்த மாடலில் முன்பக்கத்தில் 300 mm டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 270 mm டிஸ்க் பிரேக் பெற்று தொடர்ந்து சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் புளூ, எமரால்டு, கமாண்டோ சாண்ட், பிரவுன் மற்றும் ஸ்டெல்த் ஆகிய ஏழு விதமான நிறங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

(Ex-showroom)

Exit mobile version