Automobile Tamilan

2024 டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 900 பைக் அறிமுகமானது

Triumph Speed Twin 900 my2024

சர்வதேச சந்தையில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம், மேம்பட்ட புதிய ஸ்பீடு ட்வீன் 900 பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தைக்கு புதிய ஸ்பீடு ட்வீன் 900 அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் அறிமுகம் ஸ்பீடு 400 பைக் மாடலின் வடிவமைப்பு இந்த பெரிய ஸ்பீடு ட்வீன் 900 மாடலில் இருந்து பெற்ற வடிவமைப்புதான் என்பது அறிந்த ஒன்றாகும்.

Triumph Speed Twin 900

ஸ்பீடு ட்வின் 900 மட்டுமல்லாமல், தனது போர்ட்ஃபோலியோவல் உள்ள அனைத்து மாடல்களிலும் புதிய நிறங்கள் மற்றும் சிறிய மேம்பாடுகளை கொண்டு புதிய நிறங்களை அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக வந்துள்ள பைக்கில் கார்னிவல் ரெட் மற்றும் பாண்டம் பிளாக் நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. கார்னிவல் ரெட் கலர் கருப்பு பாகங்கள் மற்றும் எரிபொருள் டேங்கில் நேர்த்தியாக அமைந்த லோகோ உள்ளது. பாண்டம் பிளாக் ஒரு தனித்துவமான தோற்றம் கொண்டு பெரும்பாலான பாகங்களில் கருப்பு நிறம் உள்ளது.

நியோ ரெட்ரோ ஸ்டைலை பெற்ற ஸ்பீட் ட்வீன் 900 மோட்டார்சைக்கிள் மாடலில் பொருத்தப்பட்டுள்ள 900சிசி, பேரலல்-ட்வின், லிக்விட்-கூல்டு என்ஜின் அதிகபட்சமாக, 7,500 rpm-ல் 64.1bhp, மற்றும் 3,800rpm-ல் 80 Nm  டார்க் ஆனது வழங்குகின்றது. இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்பீட் ட்வின் 900 ஆனது டியூப்லெர் ஸ்டீல் ட்வின் க்ரேடில் ஃபிரேம் அடிப்படையாகக் கொண்டது. இந்த பைக்கின் முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்கு, பின்புறத்தில் இரட்டை  ஷாக் அப்சார்பர் கொடுக்கபட்டு,  இரு டயர்களிலும் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் ஒற்றை டிஸ்க் பிரேக்கிங் கொண்டதாக வந்துள்ளது.

ட்ரையம்ப் ஸ்பீட் ட்வின் 900 பைக்கில் 12-லிட்டர் எரிபொருள் டேங்க் முழுமையாக நிரம்பினால் மொத்தம் 216 கிலோ எடை கொண்டிருக்கும். 765மிமீ குறைந்த இருக்கை உயரத்தை வழங்குகிறது. இந்திய சந்தைக்கு 2024 ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

இந்திய சந்தையில் டிரையம்ப் ஸ்பீடு ட்வீன் 900 பைக்கின் விலை ₹ 8,79,000 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்

Exit mobile version