Automobile Tamilan

₹2.10 லட்சத்தில் 2024 யெஸ்டி அட்வென்ச்சர் விற்பனைக்கு அறிமுகமானது

2024 yezdi adventure

2024 ஆம் ஆண்டிற்கான யெஸ்டி மோட்டார் சைக்கிளின் புதிய அட்வென்ச்சர் பைக்கின் சிறிய மாற்றங்களுடன் மேம்பட்ட எஞ்சின் மற்றும் புதிய நிறங்கள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2024 Yezdi Adventure

தொடர்ந்து அட்வென்ச்சர் என்ஜின் பவர் மற்றும் டார்க்கில் எந்த மாற்றங்கள் இல்லாமல் வந்திருந்தாலும் கூட என்ஜினுடைய பாகங்கள் முன்பை விட புதுப்பிக்கப்பட்டு இருப்பதுடன் பல்வேறு மேம்பாடுகளை செய்துள்ளதாகவும் மேலும் புகைப்போக்கில் உள்ள சில மாற்றங்களுடன் சிறப்பான ஒரு பயண அனுபவத்தை வழங்கும் என இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் பெற்று  8000 RPM-ல் 29.60 PS மற்றும் 6500 RPM-ல் 29.56 Nm டார்க் வழங்குவதுடன் இந்த மாடலில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.

முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டுள்ள யெஸ்டி அட்வென்ச்சரில் முன்புறம் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 7-ஸ்டெப் ப்ரீ-லோட் அட்ஜஸ்ட்மென்டுடன் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெறுகின்றது. இரு டயரிலும் டிஸ்க் பிரேக்கு உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் உடன் ரோடு, ஆஃப்ரோடு, ரெயின் போன்ற ரைடிங் மோடுகளை கொண்டிருக்கின்றது.

பைக்கில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு மாற்றம் என்னவென்றால் முந்தைய மாடலை விட 8 கிலோ கிராம் வரை எடை குறைவாக அமைந்திருக்கின்றது.

2024 Yezdi Adventure Price (ex-showroom India)
Tornado Black ₹ 2,09,900
Magnite Maroon ₹ 2,12,900
Wolf Grey ₹ 2,15,900
Glacier White ₹ 2,19,900

Exit mobile version