Automobile Tamilan

ஏபிஎஸ் பெற்ற 2025 பஜாஜ் பல்சர் என்எஸ் 125 விற்பனைக்கு வெளியானது

பஜாஜ் பல்சர் Ns125 abs

125சிசி சந்தையில் ஸ்போரட்டிவ் பிரிவில் கிடைக்கின்ற பஜாஜ் ஆட்டோவின் பல்சர் NS125 மாடலில் கூடுதலாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கிற்கு நேரடியான சவாலினை ஏற்படுத்த துவங்கியுள்ளது.

2025 Bajaj Pulsar NS125

எஞ்சின் உட்பட அடிப்படையான டிசைன் மற்றும் வசதிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் என்எஸ்125 தொடர்ந்து எல்இடி ஹெட்லைட் உடன் மிக நேரத்தியான ஸ்போர்ட்டிவ் லுக் வெளிப்படுத்தும் பாடி கிராபிக்ஸ், ஸ்பிளிட் சிட் பெற்றதாக அமைந்துள்ளது.

124.45 சிசி ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்ட் எஞ்சின்  8,500 ஆர்பிஎம்மில் 11 hp  8,500 ஆர்பிஎம்-யில் மற்றும் 11 Nm டார்க்கை வழங்குவதுடன் இந்த மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் கிடைக்கின்றது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் இணைக்கப்பட்டு பின்புறத்தில் நைட்ராக்ஸ் மோனோஷாக் சஸ்பென்ஷனுடன் 240 மிமீ டிஸ்க் பிரேக்குடன், 130 மிமீ டிரம் பிக்குடன் சிபிஎஸ் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 120/80 – 17 டயர் உள்ளது.

எல்சிடி முறையிலான டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்று ஸ்மார்ட்போனின் ப்ளூடூத் வாயிலாக இணைக்கும் பொழுது கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் உள்ளன. மிக முக்கியமான வசதிகளில் ஒன்றாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதியும் உள்ளது.

146 கிலோ எடை கொண்டுள்ள ஏபிஎஸ் மாடலில் தொடர்ந்து நிறங்களில் எந்த மாறுதலும் இல்லாமல் ஆரஞ்சு, சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கின்ற மாடலுக்கு டீலர்கள் மூலம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

(Ex-showroom TamilNadu)

Exit mobile version