Automobile Tamilan

2025 ஹீரோ கிளாமர் பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.!

2025 ஹீரோ கிளாமர் பைக்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாமர் பைக்கில் OBD-2B மேம்பாட்டினை தவிர புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்று ரூ.89,398 முதல் ரூ.93,398 வரை எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது.

முந்தைய மாடலை விட இரண்டாயிரம் ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மற்றபடி எஞ்சின் ஆப்ஷன் உட்பட சஸ்பென்ஷன் மற்ற மெக்கானிக்கல் சார்ந்த மாற்றங்களை ஹீரோ கிளாமர் பெறவில்லை.

தொடர்ந்து,  OBD-2B ஆதரவினை பெற்ற 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸ் உள்ளது.

சில்வர், சிவப்பு, சிவப்பு நிறத்துடன் கருப்பு, மற்றும் ப்ளூ என நான்கு விதமான நிறங்களுடன் டிஸ்க் அல்லது டிரம் என முன்பக்க பிரேக்கிங் ஆப்ஷனுடன் பின்புறத்தில் டிரம் ஆப்ஷனை பெற்றுள்ளது.

(ex-showroom Tamilnadu)

Exit mobile version