Automobile Tamilan

ஸ்போர்ட்டிவான ஹீரோ கரீஸ்மா XMR 250 அறிமுகமானது

2025 hero karizma xmr 250

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய 250சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபேரிங் ஸ்டைல் ஏரோடைனமிக்ஸ் டிசைன் பெற்ற கரீஸ்மா XMR 250 பைக்கினை EICMA 2024 கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் உள்ள எஞ்சின் உட்பட பாகங்களை பகிர்ந்து கொள்ளுகின்ற கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 250 மாடலில் உள்ள 250cc, DOHC, லிக்யூடு கூல்டு ஒற்றை சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,250rpm-ல் 30 bhp பவர் மற்றும் 7,250rpm-ல் 25 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.  இந்த எஞ்சின் 0-60 கிமீ வேகத்தை 3.25 வினாடிகளில் எட்டும் என்று ஹீரோ குறிப்பிடுகின்றது.

மிகவும் கம்ஃபோர்ட்டான பயண அனுபவத்தை வழங்கும் வகையிலான இருக்கையுடன் மிக நேர்த்தியான கோல்டன் நிறத்திலான 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் கொண்டுள்ள இந்த மாடலை ஸ்டீல் டிரெல்லிஸ் ஃப்ரேம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த  பைக் அகலமான ரேடியல் டயர்களுடன் 17 அங்குல அலாய் வீல் உடன் முன்புறம் மற்றும் பின்புறம் டிஸ்க் பிரேக் உடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் முறைகளுடன் வருகிறது.

கேடிஎம் RC 390, ஜிக்ஸர் SF 250 உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ள கரீஸ்மா XMR 250  அடுத்த சில மாங்களுக்குள் விற்பனைக்கு வெளியாகலாம்.

 

Exit mobile version