Automobile Tamilan

2025 ஹீரோ சூப்பர் ஸ்ப்ளென்டர் எக்ஸ்டெக்கில் OBD-2B வெளியானது

2025 ஹீரோ சூப்பர் ஸ்ப்ளென்டர் எக்ஸ்டெக்

ஹீரோவின் பிரசத்தி பெற்ற சூப்பர் ஸ்ப்ளெண்டர் Xtec 125சிசி பைக்கில் புதிய மாசு விதிமுறைகளுக்கு உட்பட்ட OBD-2B அப்டேட் பெற்று சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மேம்பாடு கொண்டு ரூ.87,450 முதல் ரூ.91,450 வரை எக்ஸ்-ஷோரூம் விலை நிர்ணய் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, OBD-2B மற்றும் E20 ஆதரவினை பெற்ற 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸ் உள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பருடன், பின்பக்க டயரில் வழக்கமான டிரம் பிரேக்குடன், முன்பக்க டயரில் டிஸ்க் அல்லது டிரம் பிரேக் ஆப்ஷனை கொண்டதாக அமைந்துள்ள சூப்பர் ஸ்பெளண்டர் மைலேஜ் லிட்டருக்கு 69 கிமீ என ARAI சான்றிதழ் வழங்கியுள்ளது.

Exit mobile version